பந்துவீச சில அடிகள் எடுத்து வைத்தாலே கண்டுபிடிச்சு அடிச்சிடுவாரு – இந்திய வீரரை புகழ்ந்த சக்லைன் முஷ்டாக்

Mushtaq-3
- Advertisement -

கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவரது காலகட்டத்தில் விளையாடியவர்கள் எல்லாம் மிகப்பெரும் ஜாம்பவான்கள். கிளன் மெக்ராத், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், பிரையன் லாரா,அக்தர், முத்தையா முரளிதரன், சமிந்தா வாஸ் என மிகப்பெரும் ஜாம்பவான் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு ஆடி பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கரின் பிறந்த தினமான நேற்று சக்லைன் முஸ்டாக் அவர் பற்றி பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :1999 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது நானும் அவரும் பேசிக்கொள்ளவே இல்லை. இருவரும் ஆட்டத்தில் உன்னிப்பாக இருந்தோம். சச்சின் டெண்டுல்கரின் ஆட்டம் நம்பமுடியாத ஆட்டம். அன்று வாசிம் அக்ரம் வீசிய பந்து ரிவர்ஸ் ஸ்கிங் ஆனது.

ஆனால் அதனை அவ்வளவு உறுதியாகவும் நேர்த்தியுடனும் அற்புதமாக ஆடினார் சச்சின். வாசிம் அக்ரம் வீசிய பந்தை அப்படி மிக எளிதாக ஆடிய பேட்ஸ்மேனை நான் தற்போது வரை பார்த்ததில்லை. அந்த அளவிற்கு எளிதாக அக்ரமை அவர் அந்தப்போட்டியில் அலட்சியமாக அடித்து நொறுக்கினார். மேலும் அப்போது அக்ரமின் பந்துவீச்சில் அனைவரும் திணற சச்சினோ சாதாரணமாக அவரை எதிர்கொண்டு விளையாடினார்.

நாங்கள் பந்து வீச சில அடிகள் வைக்கும் போது நாங்கள் என்ன பந்து வீசப் போகிறோம் என்று சச்சின் டெண்டுல்கர் அறிந்துவிடுவார். ராகுல் டிராவிட் மற்றும் அசாருதின் ஆகிவரும் எங்களது பந்து வீச்சை அருமையாக ஆடுவார்கள். சச்சின் டெண்டுல்கர் மிக எளிமையான வழி யாரையும் பற்றி தவறாக பேசமாட்டார்.

sachin

அவருடன் நேரம் செலவழித்தால் நிறைய கற்றுக் கொள்ள முடியும் என்று கூறியுள்ளார் சக்லைன் முஸ்டாக். மேலும் சச்சின் கூறிய அறிவுரையினாலே நான் கிரிக்கெட் போட்டிகளின் போது ஸ்லெட்ஜிங் செய்வதை நிறுத்தியதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement