தோனி விடயத்தில் பி.சி.சி.ஐ நடந்துகொண்டது தவறு. என்ன இருந்தாலும் இப்படி பண்ணியிருக்க கூடாது – பாக் வீரர் காட்டம்

Mushtaq
- Advertisement -

மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக 2004ஆம் ஆண்டு முதல் 2019 வரை விளையாடியவர். கிட்டத்தட்ட 16 வருடங்கள் விளையாடியவர். 351 ஒருநாள் போட்டிகளிலும், 91 டெஸ்ட் போட்டிகளிலும், 98 டி20 போட்டிகளில் ஆடி அசத்தி இருக்கிறார். இதில் மொத்தமாக சேர்த்து 17,000 சர்வதேச ரன்களும், 16 சதங்களும் என்பது அரை சதங்களும் அடித்து இருக்கிறார்.

Dhoni-1

- Advertisement -

இப்படிப்பட்ட வீரர் ஓய்வினை அறிவிக்கும் போது எந்தவித பெரிய எதிர்பார்ப்பும், ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக அறிவித்து விட்டு சென்றிருக்கிறார். மேலும் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தபோது ஐசிசி நடத்திய மூன்று விதமான கோப்புகளையும் வென்று கொடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட வீரர்தான், டெஸ்ட் போட்டியிலும் அமைதியாக திடீரென ஓய்வு அறிவித்தார்.

அதேபோல் 2020 ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்தும் சர்வதேச போட்டிகளில் இருந்து மொத்தமாக எளிமையாக ஓய்வை அறிவித்து விட்டு நகர்ந்து விட்டார். இந்நிலையில் இது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. முன்னாள் பாகிஸ்தான் வீரர்களின் சக்லைன் முஸ்தாக் பேசுகையில்……

Dhoni

தோனியை இப்படி நடத்தியது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்பட்ட ஒரு தோல்வி. தோனி போன்ற மிகப்பெரிய வீரர்களை அவர்கள் சரியாக நடத்தியிருக்க வேண்டும். அவருடைய ஓய்வு இப்படி எல்லாம் முடிந்து இருக்கக்கூடாது . நான் இதை எனது இதயத்தில் இருந்து ஆழமாக சொல்கிறேன்.

- Advertisement -

நான் நினைப்பதையே பல கோடிக்கணக்கான அவரது ரசிகர்களும் நினைக்கிறார்கள். மேலும், இந்திய கிரிக்கெட் வாரித்திடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் அவரை சரியாக நடக்கவில்லை. இது என் மனதையும் என் போன்ற அவரது ரசிகர்களையும் காயப்படுத்தி விட்டது. அவர் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார் என்பது மட்டுமே ரசிகர்களுக்கு சந்தோஷம்.

Dhoni

ஆனால் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற அவரது ஓய்வு வேறுவிதமாக பிரம்மாண்டமாக இருந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சக்லைன் முஸ்தாக்.

Advertisement