பாகிஸ்தான் நாடு கிரிக்கெட் விளையாட சிறந்த இடம். இங்கு விளையாடத்தான் வேண்டும் – சங்கக்காரா வேண்டுகோள்

Sangakkara
- Advertisement -

பாகிஸ்தானில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட் ஆட முடியாமல் இருந்து வருகிறது. அவ்வப்போது ஒருசில அணிகள் பாகிஸ்தானுக்கு சென்று வந்தாலும் முழுமனதாக ஒரு தொடர் அந்த நாட்டில் இன்று வரை நடைபெற்றது இல்லை. இந்நிலையில் எம்சிசி கிரிக்கெட் கிளப்பின் தலைவராக பாகிஸ்தானுடன் சென்றிருக்கும் சங்ககாரா அங்கு இது குறித்து பேசியுள்ளார்.

Sl

- Advertisement -

ஏற்கனவே 2009ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தான் சென்ற போது தீவிரவாதிகள் இலங்கை அணி மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் . இதில் சங்ககாரவின் தலைக்கு அருகே ஒரு துப்பாக்கி குண்டு வந்து சென்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லாகூர் மைதானத்தில் எம்சிசி அணியின் தலைவராக சங்ககாரா களமிறங்குகிறார். இது குறித்து அவர் பேசியதாவது : பாதுகாப்பு என்பது உலகின் எந்த ஒரு இடத்திலும் கேள்விக்குறிதான். பாகிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட் சரியாக நடைபெறவில்லை.

ஆனால் இன்று முன்பைவிட இப்போது பாகிஸ்தானில் பாதுகாப்பு மேம்பாடுகள் அதிகரித்துள்ளது. பல சர்வதேச அணிகள் நீங்க நம்பிக்கையுடன் கொண்டு விளையாட தொடங்கியுள்ளன. பாகிஸ்தானும் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதற்கு ஒரு சரியான இடம் தான் என்பதை நிறுவவே நான் இங்கு வந்துள்ளேன் இவ்வாறு கூறினார் சங்ககாரா.

Advertisement