6 தொடர்களில் தேர்வாகியும் வெளியேதான் உட்காந்து இருக்கிறார். நாளைக்கும் அதே நிலைமை தானா ? – ரசிகர்கள் புலம்பல்

Samson-1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை ஜனவரி 5 அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்த தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக மீண்டும் பண்ட் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டதாலும் மேலும் அவருக்கு தொடர்ந்து அணி நிர்வாகத்தின் ஆதரவு இருப்பதினாலும் அவர் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

- Advertisement -

ஆனால் அவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக இந்திய அணியில் கடந்த 6 தொடர்களாக தேர்வாகி வரும் சாம்சனுக்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடர்களில் அனைத்திலும் அசத்திக் கொண்டிருக்கும் சாம்சன் தன்னை நிரூபிக்க தவறியதில்லை இருப்பினும் அவருக்கான வாய்ப்பு தொடர்ந்து அணியில் மறுக்கப்பட்டு வருகிறது.

samson

மேலும் விக்கெட் கீப்பராக மட்டுமே அவரை அணியில் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதால் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக அவரை அணியில் எடுக்கலாம் என்றும் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் திறமையான ஒரு வீரருக்கு அதும் இந்திய அணிக்காக 5 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமாகி இன்றுவரை அவருக்கான வாய்ப்புகளை வழங்கவில்லை என்றும் இந்திய ரசிகர்கள் சிலர் சாம்சனுக்கு ஆதரவாக புலம்பி வருகின்றனர்.

samson 2

மேலும் நன்றாக விளையாடாத ஒரு வீரருக்கு பதிலாக சிறப்பான பார்ம்மில் இருக்கும் வீரரான இவருக்கு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம் என்றும் ரசிகர்கள் மூலம் சமூக வலைதளங்களில் தங்களது கருத்தினை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எது எப்படி இருப்பினும் நாளைக்கும் சாம்சன் வெளியிலே அமர்ந்திருப்பார் என்று மட்டும் உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement