சஞ்சு சாம்சனின் இந்த மோசமான சாதனைக்கு கோலியும் ஒரு காரணம் – விவரம் இதோ

Samson-1
- Advertisement -

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் உள்ளூர் தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம்பிடித்தார். அணியில் இடம் பிடித்தாலும் கடந்த சில தொடர்களாகவே ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் ஏகப்பட்ட போட்டிகளில் அவர் வெளியில் அமர்ந்தபடியே போட்டியை பார்த்து கொண்டிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் பண்டின் மீதுள்ள அழுத்தத்தினாலும், சஞ்சு சாம்சன் மீதுள்ள எதிர்பார்ப்பினாலும் அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இறுதியில் நேற்றைய போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக இந்த வாய்ப்பைப் பெற்ற சஞ்சு சாம்சன் இதில் சிறப்பாக செயல்பட்டார். ரசிகர்களும் அவரின் தேர்வு குறித்து உற்சாகம் அடைந்திருந்தனர்.

பேட்டிங்கில் தான் சந்தித்த முதல் பந்தில் சிக்சர் அடித்து அசத்திய சாம்சன் அடுத்த பந்தை சரியாக கணிக்க முடியாமல் எல்.பி ஆகி வெளியேற்றி சற்று ஏமாற்றத்தை அளித்தார். இருப்பினும் அவரது கீப்பிங் குறை சொல்ல முடியாத அளவிற்கு இருந்தது என்றே கூற வேண்டும். இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் டி20 அரங்கில் ஒரு விரும்பத்தகாத மோசமான சாதனையை படைத்துள்ளார். அந்த சாதனை யாதெனில் 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அறிமுகமானார் சஞ்சு சாம்சன்.

samson

அதன்பிறகு கடந்த ஐந்து வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் இரண்டாவது டி20 போட்டியில் ஆடுகிறார். அதாவது அவர் முதல் போட்டிக்கும் இரண்டாவது போட்டிக்கு இடையே உள்ள வித்தியாசம் யாதெனில் இதுவரை அவர் 73 டி20 போட்டிகளை இழந்துள்ளார். இந்திய வீரர்களில் இவர்தான் இரண்டு போட்டிகளுக்கு இடையே மிகப்பெரிய இடைவெளி கொண்ட வீரராக உள்ளார். இதற்கு முன்னதாக உமேஷ் யாதவ் 2 டி20 போட்டிகளில் இடையே 65 போட்டிகளை தவற விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Samson

உலக அளவில் அதிக டி20 போட்டிகளில் இடைவெளிவிட்டு களமிறங்கிய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தையும் சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார். இவரின் இந்த மோசமான சாதனைக்கு இந்திய தேர்வு குழு நிர்வாகமே காரணம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கும் படியும் ரசிகர்கள் தங்களது கோரிக்கைகளை சமூக தளத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement