இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி ஏற்கனவே இந்த தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று ஹராரே நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளதால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டி துவங்கும் முன்னர் நடைபெற்ற ஒரு சந்திப்பில் ஒன்றில் கலந்து கொண்ட இந்திய அணியின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் இந்த தொடரில் தன் விளையாடுவது குறித்தும் தற்போது உள்ள சூழல் குறித்தும் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : டி20 உலகக் கோப்பை வெற்றி பெற்ற அணியில் நானும் இருந்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இன்றுவரை நாங்கள் அந்த வெற்றி கொண்டாட்டத்திலிருந்து வெளிவரவில்லை. இப்போதும் அந்த வெற்றியை நினைத்து நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.
கடந்த சில வாரங்களாகவே எங்களை சுற்றி உலக கோப்பையை வெற்றி பெற்ற புகைப்படங்கள் தான் அதிகம் இருந்து வருகின்றன. உண்மையிலேயே உலகக் கோப்பையை வென்றது ஒரு மறக்க முடியாத அனுபவம். அந்த அணியில் நானும் இருந்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அந்த தொடரில் எங்கள் வெற்றிக்கு அனைவருமே காரணம். ஒரு முழுமையான தொடராக அந்த தொடர் எங்களுக்கு இருந்தது. தற்போது இந்த தொடரிலும் நாங்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். பேட்டிங் ஆர்டரில் சில மாற்றங்கள் இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்புகளில் அனைவருமே சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.
இதையும் படிங்க : விமர்சித்த பின் நடவடிக்கை.. 1 கோடியை வெளியிட்ட ஜெய் ஷா.. கபில் தேவுக்கு நன்றி சொல்லும் ரசிகர்கள்
ஐபிஎல் தொடரில் கடந்த நான்கு ஆண்டுகளாக ராஜஸ்தான் அணியை தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறேன். அங்கு நிறைய லெஜெண்டுகளும் திறமையான இளம் வீரர்களும் இருக்கின்றனர். அந்த சூழல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.



