மண்டியிட்டு வானத்தை பார்த்து வேண்டியது ஏன்? செலிப்ரேஷன் குறித்து பேசிய – சஞ்சு சாம்சன்

Samson
- Advertisement -

நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான சூப்பர் 8 சுற்று கடைசி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. வாழ்வா? சாவா? என்கிற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்தது. இந்த போட்டியில் 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இந்திய அணி டி20 உலக கோப்பை போட்டிகளில் அதிகபட்ச சேசிங் சாதனையுடன் இந்த வெற்றியை முடித்திருந்தது.

வானத்தை பார்த்து கும்பிட்டது ஏன்? : சஞ்சு சாம்சன்

இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த துவக்க வீரர் சஞ்சு சாம்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று 50 பந்துகளை எதிர்கொண்டு 12 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். அவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டி வெற்றியுடன் முடிந்த கையோடு தனது கிளவுஸ் மற்றும் ஹெல்மெட்டை கழட்டிய அவர் தரையில் மண்டியிட்டு வானத்தை நோக்கி கும்பிட்டவாரு இந்த வெற்றியை கொண்டாடியிருந்தார். அவர் இப்படி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது.

இந்நிலையில் இந்த கொண்டாட்டத்திற்கு பின்னால் இருக்கும் விவரம் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த சஞ்சு சாம்சன் கூறுகையில் : இது எனக்கு மிகவும் சிறப்பான ஒரு தருணம். நான் இறைவனை ஆழமாக நம்பக்கூடியவன். இந்த கொண்டாட்டத்தின் உண்மை அர்த்தம் எனக்குள் மட்டும் ரகசியமாக வைத்துக் கொள்ள விரும்புகிறேன். இதை வெளிப்படுத்த வேண்டாம் என்று நினைப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் அடித்த 97 ரன்களுக்கு சமம் இவர் அடித்த 2 பவுண்டரி.. ஷிவம் துபேவை பாராட்டிய – கவுதம் கம்பீர்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 100 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான். டியூ இருந்ததால் பேட்டிங் செய்வதற்கு சற்று எளிதாகவே இருந்தது. ஆனாலும் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட வேண்டும் என்று கருதியே ஒரு முனையில் நிலைத்து நின்று இறுதிவரை விளையாடச் சென்றேன் என்றும் சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement