- Advertisement -
ஐ.பி.எல்

கையில் இருந்த மேட்சை கோட்டை விட்டுட்டோம்.. டெல்லி அணிக்கெதிரான தோல்வி குறித்து – சஞ்சு சாம்சன் வருத்தம்

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 56-வது லீக் போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 20 ரன்கள் வித்தியாசத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி அணியானது ஆரம்பத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களை குவித்தது. டெல்லி அணி அதிகபட்சமாக அபிஷேக் போரல் 65 ரன்களையும், பிரேசர் மெக்கர்க் 50 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது துவக்கத்தில் இருந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் சஞ்சு சாம்சனின் அபாரமான ஆட்டம் காரணமாக வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் அவரது விக்கெட் விழுந்த பிறகு ராஜஸ்தான் அணி சரிவை சந்தித்தது.

இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை மட்டுமே குவித்ததால் 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : கையில் இருந்த போட்டியை நாங்கள் இங்கு தவற விட்டு உள்ளோம்.

- Advertisement -

இந்த மைதானத்தில் 11 முதல் 12 ரன்கள் வரை ஒரு ஓவருக்கு அடிக்க முடியும். ஆனாலும் இறுதியில் நாங்கள் இலக்கை எட்டாமல் தோல்வியை சந்தித்ததில் வருத்தம் இருக்கிறது. இந்த மைதானத்தில் முதலில் நாங்கள் 10 ரன்கள் வரை கூடுதலாக வழங்கி விட்டோம். நிச்சயம் 210 ரன்கள் வரை துரத்தி இருக்க முடியும். டெல்லி முதலில் பேட்டிங் செய்யும்போது பிரேசர் மெக்கர்க் ஆரம்பத்திலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர்களுக்கு நல்ல அடித்தளம் அமைந்துவிட்டது. இந்த தொடர் முழுவதுமே அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : எங்க டீமோட பவுலர்ஸ்ஸை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.. வெற்றிக்கு பிறகு ரிஷப் பண்ட் மகிழ்ச்சி

இருப்பினும் நாங்கள் மிகச் சிறப்பாகவே செயல்பட்டதாக நினைக்கிறோம். சந்தீப் சர்மா மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இந்த போட்ட போட்டியில் நாங்கள் எங்கு தோற்றோம் என்பதை கண்டறிந்து அந்தக் குறையை போக்கி அடுத்த போட்டியில் பலமாக திரும்பவும் என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -