நல்லா விளையாடனா வாய்ப்பு தானா வரும். இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து – இளம்வீரர் பேட்டி

Samson-1
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்தமாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்தவாரம் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சில வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பும், சில வீரர்களுக்கு அதிர்ச்சி நீக்கமும் கிடைத்தது. அதன்படி இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கு இந்த உலகக் கோப்பைத் தொடரின் அணியில் இடம் கிடைக்கவில்லை. அண்மையில் நடைபெற்ற இலங்கை தொடரில் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

IND

- Advertisement -

இந்நிலையில் அந்த தொடரில் தனது படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது உலகக்கோப்பையில் அணியில் இடம் கிடைக்காதது குறித்து பேசிய அவர் : தற்போது என்னுடைய முழு கவனமும் ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்துவது மட்டும்தான்.

இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து அதிகமாக யோசித்து குழப்பிக் கொள்ள மாட்டேன். ஏனெனில் அதை நினைத்தால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட முடியாது. ஐ.பி.எல் தொடரை உலகளவில் அதிக மக்கள் பார்க்கிறார். இந்த தொடரின் மூலம் நமது திறனை வெளிப்படுத்தும் போது மக்கள் நம்மை பாராட்ட செய்வார்கள் அதேபோன்று சொதப்பினால் இகழவும் செய்வார்கள்.

samson 1

இதனால் தற்போதைக்கு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு அணியை முன்கொண்டு செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி நாம் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடினால் இந்திய அணியில் இடம் தானாக கிடைக்கும் என்றும் இப்போதைக்கு நான் என்னுடைய விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்த உள்ளேன் கூறியுள்ளார்.

Samson

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் மூன்று வெற்றிகளைப் பெற்று 5 ஆவது இடத்தில் இருக்கிறது. இரண்டாம் பாதியிலும் சஞ்சு சாம்சனே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement