வீட்டு மாடியில் டென்னிஸ் பந்தில் பயிற்சி. ரஜினிகாந்த் படம்.தனது ஓய்வு நேரத்திலும் பிசியாக இருக்கும் – இந்திய இளம் வீரர் பேட்டி

Samson-1
- Advertisement -

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு காரணமாக பெரும்பாலான நாடுகள் ஊரடங்கில் மூழ்கி கிடக்கின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற இருந்த பதிமூன்றாவது ஐபிஎல் தொடரும் இருமுறை தள்ளி வைக்கப்பட்டு தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.

Ipl cup

- Advertisement -

இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் அந்த வீரர்கள் அனைவரும் தற்போது வீட்டுக்குள் முடங்கி பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தங்களது ஓய்வு நேரத்தை சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்து வரும் வீரர்கள் கிரிக்கெட் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் இளம் வீரரும், டெல்லி அணியின் நட்சத்திர வீரருமான சஞ்சு சாம்சன் “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” செய்தி நிறுவனத்திற்கு சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் பல்வேறு விடயம் குறித்து பேசியுள்ள சஞ்சு சாம்சன் கூறியதாவது : ஊரடங்கு காலத்திற்கு முன்பே எனக்கு பயிற்சிகளை மேற்கொள்ள சில உதாரண உபகரணங்கள் கிடைத்துவிட்டன.

ஜிம் சைக்கிள், உடற்பயிற்சி உபகரணங்கள் என பலவற்றை நான் என் வீட்டு மாடியில் வைத்து பயிற்சியாளர் கூறும்படி பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். அதுமட்டுமின்றி எனது சகோதரர் வீட்டு மொட்டை மாடியில் வலைகட்டி அதில் டென்னிஸ் பந்து மூலம் பேட்டிங் பயிற்சி செய்து வருகிறேன் என்றும் சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.

- Advertisement -

அத்துடன் ஏழு எட்டு வருடங்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறேன் தற்போது விளையாடாமல் வீட்டில் முடங்கி இருப்பது முற்றிலும் வேறு மாதிரி இருக்கிறது. இந்த ஓய்வு நேரத்தில் நான் ரஜினி படங்கள் மற்றும் எனக்கு பிடித்த மலையாள படங்களை பார்த்து வருகிறேன். பெரும்பாலும் செய்திகளை விரும்பாத நான் தற்போது கொரோனா குறித்த செய்திகளை மட்டும் பார்த்து வருகிறேன்.

samson 1

அது குறித்த செய்திகள் எனக்கு மன வருத்தத்தை அளிப்பதாகவும் சஞ்சு சம்சன் தெரிவித்தார். மேலும் இந்த இக்கட்டான நேரத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அரசியல் தலைவர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement