
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது வரும் டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும், வெளியேற்ற விரும்பும் வீரர்களையும் பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் கடந்த நவம்பர் 15-ஆம் தேதி அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்க விரும்பும் வீரர்கள் பட்டியலையும் மற்றும் வெளியேற்றும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு விட்டன. மேலும் அதற்கு முன்னதாகவே ட்ரேடிங் முறையிலும் சில வீரர்களின் அணி மாற்றம் நடைபெற்றது.
அந்த வகையில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மினி ஏலத்திற்கு முன்னதாக தங்களின் இருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை ராஜஸ்தான் அணிக்கு வழங்கி ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேற விரும்பிய சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் தங்களது அணிக்குள் கொண்டு வந்துள்ளது.
இப்படி 12 ஆண்டுகளாக சென்னை அணியின் முக்கிய அங்கமாக இருந்து வந்த ரவீந்திர ஜடேஜா வெளியேற்றப்பட்டது ஒருபுறம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. அதேவேளையில் தோனிக்கு அடுத்து அவரது இடத்தை பூர்த்தி செய்ய சஞ்சு சாம்சன் கிடைத்திருப்பதால் அவரது வரவை வரவேற்கவும் துவங்கியுள்ளனர்.
தற்போது சி.எஸ்.கே அணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது குறித்தும், முதல் முறையாக தான் சிஎஸ்கே ஜெர்சி அணிந்து குறித்தும் சில கருத்துக்களை சஞ்சு சாம்சன் வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் சி.எஸ்.கே ஜெர்ஸி அணிந்த பிறகு பேசியதாவது : மஞ்சள் நிற ஜெர்சியை அணியும் நாளுக்காக காத்திருந்தேன்.
இதையும் படிங்க : தெ.ஆ அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்தில் அவருக்கு சேன்ஸ் குடுங்க – முகமது கைப் ஆதரவு
நான் ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் அடர்ந்த நிறத்திலான ப்ளூ, பிளாக், பிரவுன் ஆகிய ஜெர்சிகளை அணிந்ததை விட மஞ்சள் நிறத்தினை அணிவது புது வித்தியாசமாக இருக்கிறது. இது நடக்கும் என்பதை நான் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. இந்த ஜெர்சியை அணிந்த போது ஒரு வித்தியாசமாகவும், சாம்பியனை போல உணர்ந்ததாகவும் சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சியுடன் கூறியது குறிப்பிடத்தக்கது.