எனக்கு பின்னால் இவர் ஆடப்போகிறார் என்று நினைக்கும்போதே பதற்றம் தொற்றிக்கொள்கிறது – மனம்திறந்த சாம்சன்

samson
- Advertisement -

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் இந்திய அணியில் இவரது இடம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் 2015 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான அவர் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக வெறும் 4 டி-20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
அந்த அளவிற்கு இவருக்கு எப்போதாவதுதான் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

samson 1

- Advertisement -

இருப்பினும் முதல் தரப் போட்டிகளில் சரி, ஐ.பி.எல் தொடரிலும் சரி இவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் தற்போது தோனி ஓய்வு பெற இருப்பதால் அவருக்கு பின்னர் அணியில் இடம்பிடிக்க இவருக்கும் பண்ட் ஆகிய இருவருக்குமிடையே ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது.

கடந்த ஆண்டு கூட நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான தொடரில் விளையாடிய அவர் பேட்டிங்கில் சொதப்பினாலும், கீப்பிங்கில் சற்று அசத்தலாக செயல்பட்டார். வருங்காலத்தில் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படும் சூழ்நிலையில் தற்போது இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரிலும் தான் விளையாடிய அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார் சஞ்சு சாம்சன்.

samson

அதிலும் கோலி குறித்து அவர் கூறும்போது : இந்திய அணியின் டி20 போட்டிகளின் போது வேகமாக ரன்களை குவிக்க வேண்டும். ஏனெனில் நமக்கு பின்னர் விராட் கோலி களமிறங்க உள்ளார் என்பதை நினைக்கும் போது நம்மால் 10 பந்துகளை கூட ரன் எடுக்காமல் தவற விடக்கூடாது என்று தோன்றும். மேலும் அவ்வாறு பந்துகளை வீணடித்து நிதானமாக ஆட முடியாது.

Samson-1

அதனால்தான் நான் ஐபிஎல் போட்டிகளிலும் சரி சர்வதேசப் போட்டிகளும் சரி அதிரடியாக விளையாடி வருகிறேன் என்று கூறினார். மேலும் அத்துடன் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ஐபிஎல் தொடர் தொடங்க ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும், ஐபிஎல் தொடர் நடந்தால் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுமே மீண்டு எழும் என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement