அண்மையில் நடைபெற்று முடிந்த 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரினை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடிய சஞ்சு சாம்சன் 5 ஆட்டங்களில் விளையாடி 321 ரன்கள் குவித்து இந்த டி20 தொடரில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரராக தனது பெயரை பதிவு செய்தார்.
3 சதத்தை தவறவிட்டேன்.. ஆனால் வருத்தமில்லை : சஞ்சு சாம்சன்
அதுமட்டும் இன்றி இந்த தொடரின் முக்கியமான நேரத்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை கோப்பை நோக்கி அழைத்துச் சென்றதால் அவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதோடு மட்டுமின்றி டி20 போட்டிகளில் அவர் இந்திய அணியின் துவக்க வீரராக நிரந்தர இடத்தை பிடிக்க வேண்டும் என்ற கருத்துக்களும் நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் மூன்று முறை தனக்கு சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும் அணிக்காக அதை தவறவிட்டதாக சஞ்சு சாம்சன் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : 2024-ஆம் ஆண்டு இலங்கை டி20 தொடரின் போது கம்பீர் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் தனிப்பட்ட சாதனைகளுக்காக இடம் கொடுக்கக் கூடாது என்றும் இந்திய அணியின் வெற்றிக்காக மட்டுமே யோசிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
அப்போது அவர்கள் கூறிய வார்த்தைகள் எங்களுக்குள் விதைக்கப்பட்டவை. எனவே நான் இந்த தொடரில் மூன்று சதங்களை தவறவிட்டதாக சொல்லும்போதும் அணிக்கு மிக சிறப்பான பங்களிப்பை செய்ததாக உணர்கிறேன். நான் தவறவிடப்பட்ட சதங்களை பற்றி நினைக்கவே இல்லை. ஆனாலும் ஒரு சதம் அடித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்தேன்.
இதையும் படிங்க : கே.கே.ஆர் அணியை பாக்கும் போது ரொம்ப பாவமா இருக்கு.. அதுக்கு காரணம் இதுதான் – சுரேஷ் ரெய்னா விளக்கம்
நீங்களாக இருந்தாலும் அதையே யோசித்து இருப்பார்கள். அதே நேரத்தில் நான் அணிக்காக விளையாடி வெற்றி பெற்று கொடுத்ததில் மகிழ்ச்சி. தனிப்பட்ட சாதனைக்காக சதம் குறித்து யோசிக்கவில்லை என்றும் சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.



