என்னது சஞ்சு சாம்சனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா ? அதும் இவ்வளவு அழகான மனைவியா ? – புகைப்படம் இதோ

samson
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான சஞ்சு சாம்சன் கடந்த 2015ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் இந்தியாவிற்காக அறிமுகமானார். அதன் பின்னர் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக அவர் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை கூறியுள்ளார். சாம்சனின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு அழகான மனைவி இருக்கிறார்களா ? மேலும் இவருக்கு திருமணம் ஆகிவிட்டதா ? என்பது போல கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

சஞ்சு சாம்சன் தனது நீண்டகால தோழியான சாருலதா என்பவரை கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே நண்பர்களாக பழகி பின்னர் இருவீட்டாரது பெற்றோர்கள் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement