
இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மிக முக்கியமான 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியானது நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்தது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 253 ரன்களை குவிக்க பின்னர் 254 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கினை துரத்திய இங்கிலாந்து அணி இறுதிவரை போராடி 246 ரன்கள் மட்டுமே குவித்தது. அதன் காரணமாக 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் நுழைந்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கி விளையாடிய சஞ்சு சாம்சன் 42 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 89 ரன்களை குவிக்கவே அவருக்கு இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
பின்னர் போட்டி முடிந்து பரிசளிப்பு விழாவின் போது பேசிய சஞ்சு சாம்சன் கூறுகையில் : உண்மையில் இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது பும்ராவிற்கு தான் கொடுக்க வேண்டும். ஏனெனில் அவர் மட்டும் இல்லை என்றால் நான் இங்கு நின்று இருக்க முடியாது. இந்த தலைமுறையின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என்று பும்ராவை கூறுவேன் என சஞ்சு சாம்சன் அவரை புகழ்ந்து பேசியிருந்தார்.
இதையும் படிங்க : நாங்க விட்ட அந்த கேட்சால மேட்ச் போச்சு.. தோல்விக்கு பின்னர் இங்கிலாந்து கேப்டன் வருத்தம் – விவரம் இதோ
அப்படி அவரை புகழ்ந்து பேச காரணம் யாதெனில் : நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய போது 18வது ஓவரில் வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த பும்ரா கடைசி இரண்டு ஓவர்கள் வீசிய ஹார்டிக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகியோரது அழுத்தத்தை குறைத்தார் பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.