வாய்ப்பு வரும் வரும்னு பார்த்து நொந்துபோயுள்ள வீரர். வெறும் கனவாகி போன எதிர்காலம் – விவரம் இதோ

Samson-1

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக நடைபெறாமல் போனது. அடுத்து இரண்டாவது போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் தற்போது 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

toss

இந்நிலையில் தற்போது தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று புனே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் மாற்றம் குறித்து பல்வேறு வகையான செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில தொடர்களாகவே இந்திய அணியில் இடம் பிடித்து வரும் மனிஷ் பாண்டே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் வாய்ப்புக்காக காத்துள்ளனர். அதுவும் குறிப்பாக சஞ்சு சாம்சன் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியில் தேர்வானார். ஆனாலும் கடந்த பல போட்டிகளாகவே வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் அமர்ந்துள்ளார்.

Pant-1

தொடர்ந்து சொதப்பலாக ஆடிவரும் பண்டை வெளியேற்றிவிட்டு வலுவிழந்த வீக்கான அணியான இலங்கை அணிக்கு எதிராக இன்று ஒரு போட்டியிலாவது அவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று ஒருபக்கம் வலுவான குரல்கள் எழுந்து வர இந்திய அணியில் இதுவரை சாம்சனுக்கு ஒரு போட்டியில் கோடா விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசியாக 5 ஆண்டுகளுக்கு முன்னர் டி20 போட்டிகளில் இந்திய அணியில் அறிமுகமான சாம்சன் அதன் பிறகு இந்திய அணியில் ஆடுவது வெறும் கனவாகவே மாறிவிட்டது என்றே கூறலாம்.

- Advertisement -

Samson-1

பல வருடங்கள் கழித்து மீண்டும் அணியில் இடம் கிடைத்த போதிலும் அவருக்கான வாய்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை என்பது ரசிகர்களிடையே ஒரு அதிருப்தியான விடயமாக மாறியுள்ளது. இன்றைய போட்டியிலாவது ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்ற விவாதங்கள் தொடர்ந்து வரும் நிலையில் இன்றைய போட்டியிலும் அவர் வாய்ப்பு கடினம் தான் என்று கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த போட்டியில் விளையாடிய அணியே இந்திய இன்றும் விளையாடும் என்று தெளிவாக தெரிகிறது.