10 வருட தோல்விகளை தாண்டி.. ஒருவழியா இந்தியாவுக்காக இந்த வாய்ப்பு கிடைச்சுருக்கு.. சாம்சன் நெகிழ்ச்சி

Sanju Samson
- Advertisement -

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் துவங்க உள்ளது. அத்தொடரில் இந்திய அணி சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறது. அதனால் சொந்த மண்ணில் இந்தியா மீண்டும் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

அதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியிலிருந்து கடைசி நேரத்தில் துணைக் கேப்டன் சுப்மன் கில் கழற்றி விடப்பட்டார். அதன் காரணமாக மீண்டும் சஞ்சு சாம்சன் ஓப்பனிங்கில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. நீண்ட காலமாக மிடில் ஆர்டரில் தடுமாறிக் கொண்டிருந்த அவருக்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்தார்.

- Advertisement -

10 வருட போராட்டம்:

அந்த வாய்ப்பில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதத்தை அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பராக சாதனை படைத்த சாம்சன் மொத்தம் 3 சதங்கள் விளாசினார். இருப்பினும் திடீரென அவரை கழற்றி விட்ட கௌதம் கம்பீர் ஓப்பனிங்கில் சுப்மன் கில்லை விளையாட வைத்தார். அந்த வாய்ப்பில் சுமாராக விளையாடிய கில் கடைசி 18 போட்டிகளில் அரை சதம் கூட அடிக்காமல் தடுமாறினார்.

மறுபுறம் மிடில் ஆர்டரில் ஓரளவு அசத்தி வந்த சாம்சன் தென்னாப்பிரிக்காவுக்கு கடைசி டி20 போட்டியில் காயமடைந்த கில்லுக்கு பதிலாக விளையாடினார். அந்த வாய்ப்பில் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய அவர் கில்லை விட தம்மால் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதைக் நிரூபித்தார். அதனால் கில்லை கழற்றி விட்ட தேர்வுக்குழு அவரை ஓப்பனிங்கில் விளையாடுவதை உறுதி செய்துள்ளது.

- Advertisement -

சாம்சன் நெகிழ்ச்சி:

இந்நிலையில் கடந்த 10 வருடங்களாக இந்திய அணியில் நிறைய தோல்விகளை சந்தித்துள்ள தமக்கு முதல் முறையாக உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைத்துள்ளதாக சாம்சன் உருக்கமாக பேசியுள்ளார். இது பற்றி பிசிசிஐ இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் கடந்த 10 வருடங்களில் நிறைய நிறைய தோல்விகளைச் சந்தித்தேன். அங்கேயும் இங்கேயுமாக சில வெற்றிகள் இருந்தன”

இதையும் படிங்க: இதை செஞ்சா போதும்.. உங்களால் ஃபார்முக்கு வந்து 360 டிகிரியில் அடிக்க முடியும்.. ஆகாஷ் சோப்ரா அட்வைஸ்

“இந்திய அணிக்காக உலகக் கோப்பையில் விளையாடும் வீரராக வருவதற்கு என்ன தேவை என்பதையும் அதை நான் எவ்வளவு விரும்புகிறேன் என்பதையும் புரிந்து கொள்வது எனக்குப் பிடித்திருந்தது. 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த எனக்கு ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் எனது கேரியரில் ஏற்ற இறக்கங்கள் இருந்தன. அது நான் நிர்ணயத்த எதிர்பார்ப்புகளுடன் பொருந்தவில்லை. இருப்பினும் 2026இல் 15 பேர் கொண்ட அணியில் இடம் பிடித்தற்காக நான் நன்றியுடையவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement