- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மோகன்லால் மாதிரி நான் இந்திய அணியின் ஜோக்கர், வில்லனா இருந்தாகனும்.. சாம்சன் உருக்கமான பேட்டி

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. அத்தொடரில் சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பு பெற்றார். அதனால் பெஞ்சில் அமர வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

கடந்தக் காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாற்றமாக விளையாடிய அவர் ஓப்பனிங்கில் களமிறங்கி 3 சதங்கள் அடித்து ஒருவழியாக இந்திய அணியில் தமக்கான இடத்தைப் பிடித்தார். ஆனால் அவருடைய இடத்தை பறித்த கௌதம் கம்பீர் துணை கேப்டன் என்பதால் சுப்மன் கில்லை ஓப்பனிங்கில் களமிறக்கியுள்ளார். அதையும் குறை சொல்லாமல் ஏற்றுக்கொண்ட சாம்சன் ஆசியக் கோப்பையில் மிடில் ஆர்டரில் ஓமனுக்கு எதிராக அரை சதத்தை அடித்தார்.

- Advertisement -

ஹீரோவாக மட்டும் இருக்க முடியாது:

இருப்பினும் பாதிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் தடுமாற்றமாக விளையாடிய அவர் வங்கதேசத்துக்கு எதிராக நேற்றைய போட்டியில் களமிறங்கும் வாய்ப்பை பெறவில்லை. குறிப்பாக சிவம் துபே, அக்சர் படேல் ஆகியோரை முன்னே அனுப்பிய கௌதம் கம்பீர் அவரை 8வது இடத்தில் களமிறங்குவதற்காக காத்திருக்க வைத்தார். அதற்குள் 20 ஓவர்கள் முடிந்ததால் கடைசி வரை சாம்சனுக்கு களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மொத்தத்தில் சஞ்சு சாம்சனை குப்பையைப் போல் பயன்படுத்தும் இந்திய அணியை சில முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியில் எது உங்களுக்கான சரியான இடம்? என்று அவரிடம் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கேட்டார். இது பற்றி அவர் கேட்டது பின்வருமாறு. “உங்களிடம் கேட்க நிறைய எளிதான கேள்விகள் இருக்கிறது”

- Advertisement -

ஜோக்கர், வில்லனாகவும் இருக்கனும்:

“ஒரு இறுதி கேள்வி என்னவெனில், நீங்கள் அடித்த 3 சர்வதேச டி20 சதங்களையும் ஓப்பனிங்கில் அடித்துள்ளீர்கள். எனவே உங்களுக்கு அணியில் எந்த இடம் கச்சிதமாக இருப்பதாக உணர்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு சாம்சன் கொடுத்த பதில் பின்வருமாறு. “சமீபத்தில் எங்களுடைய கேரள நடிகர் மோகன்லால் அவர்களுக்கு நம்முடைய நாட்டின் மிகப்பெரிய (தாதாசஹேப் பால்கே) விருது கிடைத்தது”

இதையும் படிங்க: தோனி – கோலியின் வித்தியாசம் இதான்.. தப்பு செஞ்சா தான் கத்துக்க முடியும்ன்னு சொல்வாரு.. இஷாந்த் பேட்டி

“அவர் கடந்த 30 – 40 வருடங்களாக நடித்து வருகிறார். நானும் நாட்டுக்காக கடந்த 10 வருடங்களாக விளையாடி வருகிறேன். எனவே அணியில் குறிப்பிட்ட வேலையை மட்டுமே செய்வேன் என்று என்னால் சொல்ல முடியாது. நான் வில்லனாகவும் ஜோக்கராகவும் இருக்க வேண்டும். ஓப்பனிங் அல்லது டாப் 3 இடங்களில் மட்டுமே விளையாடி ரன்கள் அடிப்பேன் என்று என்னால் சொல்ல முடியாது. எனவே என்னை இதையும் (மிடில் ஆர்டர்) செய்ய விடுங்கள். என்னால் நல்ல வில்லனாக இருக்க முடியாதா?” என்று உருக்கமாக பேசினார்.

- Advertisement -