ஏமாற்றம் அளித்த ராகுல் டிராவிடின் தேர்வு. வருத்தத்தில் சீனியர் வீரர் – என்ன நடக்குது இந்திய அணியில் ?

Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஆனது இன்று கொழும்பு பிரம்மதேச மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி தஷன் ஷாக்கா தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 262 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கருணரத்னே 43 ரன்களையும், கேப்டனுக்கு கேப்டன் ஷனகா 39 ரன்களும் குவித்தனர்.

INDvsSL

- Advertisement -

அதன் பின்னர் தற்போது 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட தயாராக இருக்கிறது. இந்நிலையில் இந்த இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக அனுபவ வீரர் சஞ்சு சாம்சன் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஷான் கிஷனுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நிச்சயம் சீனியர் வீரரான சஞ்சு சாம்சன் வருத்தத்தில் இருப்பார் என்று தெரிகிறது. ஏனெனில் பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சன் அதுமட்டுமின்றி இந்தியா டி20 அணியில் ஏற்கனவே இடம்பெற்ற அவருக்கு இந்த ஒருநாள் தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

Samson

அதே வேளையில் இளம் வீரர் என்ற காரணத்திற்காக அவருக்கு பதிலாக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால் பிளேயிங் லெவன் தேர்வில் சஞ்சு சாம்சன் வருத்தத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது இந்திய அணிக்கு சற்று பலவீனம் என்றே கூறலாம்.

Advertisement