இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் அயர்லாந்து அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் 5 ரன்களும், இரண்டாவது ஆட்டத்தில் ரன் எதுவும் அடிக்காமல் ஏமாற்றம் அளித்திருந்தார். அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜூலை ஒன்றாம் தேதி நடைபெற்ற முதல் போட்டியிலும் 7 பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
சஞ்சு சாம்சன் நிகழ்த்த காத்திருக்கும் சாதனை :
இதன் காரணமாக பாரமின்றி தவிக்கும் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷியை சேர்க்க வேண்டும் என்ற பேச்சுக்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. ஆனால் டி20 உலக கோப்பை தொடரில் அழுத்தமான போட்டிகளிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி தேடித்தந்த அவருக்கு சரியான ஆதரவினை வழங்குவோம் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் அவர் தொடர்ந்து துவக்க வீரராக அபிஷேக் சர்மாவுடன் இணைந்த விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக வைபவ் சூர்யவன்ஷி தனது அறிமுக போட்டிக்காக காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த எஞ்சியுள்ள நான்கு போட்டிகளுக்குள் அவருக்கு சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த அற்புதமான வாய்ப்பு காத்திருக்கிறது. அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் சஞ்சு சாம்சன் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக கடந்த 2015-ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 65 போட்டியில் விளையாடி 3 சதம் மற்றும் 6 அரைசதம் என 1405 ரன்கள் குவித்துள்ளார். இதன் காரணமாக இந்த தொடரில் அவர் மேலும் 95 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக 1500 ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் இணைவார்.
இதையும் படிங்க : முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளராக அக்சர் படேல் நிகழ்த்த காத்திருக்கும் மாபெரும் சாதனை – விவரம் இதோ
இந்திய அணி சார்பாக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக ரோஹித் சர்மா 4231 ரன்களுடன் முதலிடத்திலும், 4188 ரன்களுடன் விராட் கோலி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இந்திய அணி சார்பாக டி20 போட்டிகளில் இதுவரை 9 வீரர்கள் 1500 ரன்களுக்கு மேல் அடித்துள்ள வேளையில் இந்த பட்டியலில் பத்தாவது வீரராக சஞ்சு சாம்சனுக்கு அற்புதமான வாய்ப்பு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



