6 ஆண்டுகள் காத்திருப்பு. இறுதியாக கிடைத்த வாய்ப்பு – இன்றைய போட்டியில் அறிமுகமாக இருக்கும் அந்த வீரர் ?

ind
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று முதல் (ஜூலை 18) நடைபெற இருக்கிறது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் தவான் தலைமையிலான இந்திய அணியும், தசன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் மோதுகின்றன. இந்த போட்டி பகலிரவு போட்டியாக கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்திய நேரப்படி இன்று மதியம் மூன்றரை மணிக்கு துவங்கும் இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக எந்தெந்த வீரர்கள் விளையாட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் ஒருநாள் போட்டிகளில் இன்று அறிமுகமாவார் என்று தெரிகிறது.

ஏற்கனவே 2015ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமாகி இருந்தாலும் தோனி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரது ஆட்டம் காரணமாக சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது ரிஷப் பண்ட் இங்கிலாந்து தொடரில் இருப்பதால் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் முதன்மை விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் இன்று ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாவார் என்று தெரிகிறது.

Samson

சிறப்பான ஆட்டம் இருந்தும் அருமையான திறமை இருந்தும் அதனைத் தொடர்ந்து தக்க வைக்க முடியாததால் சஞ்சு சாம்சன் வாய்ப்பே தக்கவைக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் இந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணியில் அவர் நீடிப்பார் என்று தெரிகிறது.

Samson

இந்திய அணிக்காக இதுவரை ஏழு டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 83 ரன்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement