பண்ட் இடத்திற்கு ஆப்பு வைக்கவுள்ள சஞ்சு சாம்சன். என்ன பண்ணி வச்சிருக்கார் பாருங்க – விவரம் இதோ

samson

இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்த ஆண்டு தற்போது நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி வரை நடக்கிறது.

vijay hazare

இந்நிலையில் இந்த தொடரின் லீக் போட்டியில் கேரளா மற்றும் கோவா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேரள அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அந்த அணியின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் இந்த போட்டியில் எதிரணி பந்துவீச்சாளர்கள் இரக்கமின்றி அடித்து தும்சம் செய்தார்.

127 பந்தில் 20 பவுண்டரி 10 சிக்ஸர்கள் என 212 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணி வீரர்கள் அணி தேர்வுக்காக காத்திருக்கும் நிலையில் தற்போது சாம்சன் ரிஷப் பண்ட் இன் இடத்தை காலி செய்ய தனது அஸ்திவாரத்தை போட்டுள்ளார்.

samson 2

ஏற்கனவே சரியாக விளையாடாத காரணத்தால் அடுத்து யாரை தேர்வு செய்வது என்று தேர்வுக் குழுவினர் யோசித்து இருக்கும் இந்நிலையில் இரட்டை சதமடித்து நானும் போட்டியில் இருக்கிறேன் என்று சாம்சன் பண்டிற்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.