இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கணுனா இதுமட்டும் தான் வழியாம் – வாய்ப்பு கிடைக்குமா ?

Samson
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது கடந்த கடந்த 18ஆம் தேதி துவங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த முதல் போட்டியின்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Samson

- Advertisement -

ஆனால் அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் அவருக்கு பதிலாக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தனது அறிமுக வாய்ப்பில்லையே அரைசதம் அடித்து அசத்திய இஷான் கிஷன் நிச்சயம் இந்த இரண்டாவது போட்டியிலும் பங்கேற்பார் என்று தெரிகிறது. இந்நிலையில் தற்போது சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டுமெனில் ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது.

அதாவது இன்று நடைபெற இருக்கும் 2வது ஒருநாள் போட்டியில் நிச்சயம் மணிஷ் பாண்டேவிற்கு பதிலாக மட்டுமே அவரால் விளையாட முடியும். கடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய மனிஷ் பாண்டே 40 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 26 ரன்கள் மட்டுமே குவித்ததால் அவருக்கு பதிலாக மட்டுமே சஞ்சு சாம்சன் விளையாட முடியும்.

Samson 1

அவரை தவிர மற்ற அனைவரும் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த காரணத்தினால் சாம்சன் இன்றைய போட்டியில் விளையாட வேண்டும் என்றால் மணிஷ் பாண்டேவிற்கு மட்டுமே பதிலாக மட்டுமே தான் விளையாட முடியும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் சஞ்சு சம்சன் 4-வது வீரராக அணியில் விளையாடுவாரா ? அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா ? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement