இன்னைக்கும் ரோஹித் விளையாடமாட்டாரு. அவருக்கு பதில் இவர்தான் ஆடுவாராம் – விவரம் இதோ

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

IndvsNz

- Advertisement -

இந்த தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி கடந்த இரு போட்டிகளாக நம்பமுடியாத வெற்றிகளை பெற்று வருகிறது. அதாவது இறுதி வரை சிறப்பாக விளையாடும் நியூசிலாந்து இறுதிநேரத்தில் ஆட்டத்தை கோட்டைவிட்டு போட்டி சூப்பர் ஓவர் வரை செல்கிறது. அப்படி சூப்பர் ஓவர் வரை சென்ற போட்டிகள் இரண்டிலும் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மவுண்ட் மாங்கனியில் நடக்க இருக்கிறது. இந்த போட்டியை பொறுத்தவரை ஏற்கனவே இந்திய அணி தொடரை வென்றதால் கடந்த போட்டியில் ஓய்வு எடுக்கப்பட்ட ரோகித் சர்மாவுக்கு இன்றும் ஓய்வு நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் அவரின் இடத்திற்கு மாற்றாக கிடைத்த வாய்ப்பை கடந்த போட்டியில் தவறவிட்ட சாம்சன் மீண்டும் அந்த வாய்ப்பை பெற உள்ளார். இந்த முறையாவது அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Samson

மேலும் தற்போது சில தொடர்களாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் கொஞ்சம் பலம் அடைந்துள்ளது என்றே கூறலாம். ஐயர், பாண்டே ஆகியோரில் ஒருவர் மாற்றி மாற்றி சிறப்பான ஆட்டத்தை கொடுப்பது அணிக்கு பலம் தான். மேலும் பந்துவீச்சை பொருத்தவரை பும்ரா அசத்தலாக பந்து வீசி வருகிறார்.

Thakur 1

மேலும் தாகூரும் கடந்த போட்டியில் பார்முக்கு திரும்பி உள்ளதால் பவுலிங் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே சைனி மற்றும் சாஹல் ஆகியோரும் கலக்குவார்கள் என்பதால் இந்திய அணி நிச்சயம் இந்த போட்டியை வெற்றிகரமாக முடித்து 5 – 0 என்ற கணக்கில் தொடரை முடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement