IPL 2023 : ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு 12 லட்சம் அபராதம் விதிப்பு – எதற்கு தெரியுமா?

Samson
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது.

CSK vs RR

- Advertisement -

அதன்படி இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே குவித்தது.

அதனை தொடர்ந்து 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே குவித்ததால் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

Ashwin

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போட்டியை கொண்டு சென்று வெற்றியை பெற்ற வேளையில் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அதன்படி ஐபிஎல் நடத்தை விதிமுறைகளின் படி போட்டிக்கான ஓவர்களை வீசுவதில் குறிப்பிட்ட நேரத்தையும் தாண்டி அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதனால் அணியின் கேப்டன் என்ற முறையில் சஞ்சு சாம்சனிற்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர் குறித்த நேரத்தில் பந்து வீசாமல் தாமதப்படுத்தியதால் இந்த அபராதம் அவர் மீது விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அந்த நாட்டுல இருந்தது ஜெயில் மாதிரி உணர்ந்தேன், நல்லவேளை கடவுள் காப்பாத்திட்டாரு – சைமன் டௌல் அதிரடி கருத்து

ஏற்கனவே கடந்த சில போட்டிகளுக்கு முன்னர் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காமல் தாமதம் செய்ததாக பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ்க்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட வேளையில் தற்போது சஞ்சு சாம்சனுக்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement