- Advertisement -
ஐ.பி.எல்

நியாயத்தை கேட்ட சஞ்சு சாம்சன்.. பதிலுக்கு அதிரடி தண்டனை வழங்கிய ஐபிஎல் நிர்வாகம்.. ரசிகர்கள் கோபம்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 56வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வீழ்த்தியது. மே ஏழாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி ஜேக் பிரேசர்-மெக்குர்க் 50, அபிஷேக் போரல் 65, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 41 ரன்கள் எடுத்த உதவியுடன் 222 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய ராஜஸ்தானுக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் அற்புதமாக விளையாடி 86 (46) ரன்கள் குவிக்க போராடினார். ஆனால் எதிர்ப்புறம் ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியதால் 20 ஓவரில் 201/8 ரன்கள் மட்டுமே எடுத்து ராஜஸ்தான் தோல்வியை சந்தித்தது. அதனால் வெற்றி பெற்ற டெல்லி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

அநியாய அபராதம்:
மறுபுறம் போராடி தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது. முன்னதாக இந்த போட்டியில் டெல்லிக்கு சிம்ம சொப்பனமாக விளையாடிய சஞ்சு சாம்சன் 86 ரண்களில் இருந்த போது முகேஷ் குமார் வீசிய 15வது ஓவரின் 4வது பந்தில் சிக்சர் அடித்தார். அதை பவுண்டரி எல்லையில் டெல்லி வீரர் ஷாய் ஹோப் கச்சிதமாக பிடிக்காததால் களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுத்தார்.

இருப்பினும் அப்போது அவருடைய கால் பவுண்டரி எல்லையில் உரசிது போல் தெரிந்ததால் அதை சோதிக்குமாறு நடுவரிடம் சஞ்சு சாம்சன் வாதிட்டார். ஆனால் அதை ஏற்றுக்கொண்ட 3வது நடுவர் மைக்கேல் கௌ அரையும் குறையுமாக ஒரு நிமிடத்திற்குள் சோதித்து பார்த்து விட்டு மீண்டும் அவுட் வழங்கியது சஞ்சு சாம்சனை ஏமாற்றமடைய வைத்தது. அதனால் மீண்டும் களத்தில் இருந்த நடுவரிடம் வாதிட்ட சாம்சன் கடைசியில் அதிருப்தியுடன் வெளியேறினார்.

- Advertisement -

இந்நிலையில் டெல்லிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் 2.8 விதிமுறையை மீறி நடுவரின் தீர்ப்புக்கு எதிராக நீண்ட நேரம் பேசியதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே அதற்கு தண்டனையாக இந்த போட்டிக்கான சம்பளத்திலிருந்து 30% சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: விராட் கோலிக்கும் இப்படி தான் ஆச்சு.. கண்ணை திறந்து பாருங்கய்யா.. அம்பயரை விளாசிய சித்து

இதை பார்க்கும் ரசிகர்கள் பவுண்டரி எல்லையில் ஷாய் ஹோப் கால் 2 முறை பட்டதா இல்லையா என்று ஒழுங்காக சோதிக்காமல் சுமாராக செயல்பட்ட அம்பயருக்கு எவ்வளவு அபராதம் போடுவீர்கள்? என்று ஐபிஎல் நிர்வாகத்தின் மீது கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். மேலும் ஏற்கனவே விராட் கோலிக்கு நோபாலில் அவுட் வழங்கியது உட்பட இந்த வருடம் அம்பயர்கள் நிறைய குளறுபடியான தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். எனவே அவர்களுக்கு என்ன தண்டனை? எவ்வளவு அபராதம்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -