இந்திய அணியில் ஏற்பட்டுள்ள திருப்பம். பண்ட் நீக்கம் புதிய கீப்பரை தேர்ந்துடுக்கவுள்ள – ரோஹித்

IND

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Khaleel

டெல்லி மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் இன்று இப்போட்டியில் மாற்றம் இருக்கும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்றைய இந்திய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் இடம்பெறும் என்று கருதப்படுகிறது. அதில் ஒன்று வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் இணைவார் என்றும் மேலும் தொடர்ந்து சொதப்பி வரும் பண்டிற்கு பதிலாக இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samson

ஒருவேளை இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைத்தது சஞ்சு சாம்சன் தனது திறமையை நிரூபித்தால் அவர் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பு இருப்பதால் அவருக்கான வாய்ப்பினை இன்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர் இன்னும் சிறிது நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -