டி20 இந்திய அணியில் தூக்கி வீசப்பட்ட இளம் வீரர். வீரர்களின் பட்டியலில் இதை கவனிச்சீங்களா ? – அடப்பாவமே

Samson-1
- Advertisement -

இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் 4வது போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கு பின்னர் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் அங்கேயே நடைபெற உள்ளது.

INDvsENG

- Advertisement -

இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்களை பிசிசிஐ நேற்று தேர்வு செய்து வெளியிட்டது. அந்த அணியில் தமிழக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் ராகுல் திவாதியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நீண்ட எதிர்பார்ப்புக்கு மற்றும் காத்திருப்புக்கு பிறகு அணியில் இணைந்து இருக்கும் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

sky

மேலும் பல ஆண்டுகளாக தான் அணியில் இடம்பெறுவேன் என்று காத்திருந்த அவருக்கு கடைசியாக இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதே போன்று இளம் வீரர்கள் இஷான் கிஷன் மற்றும் வருண் கார்த்திக் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 அணி இதோ :

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடருக்கான டி20 அணியில் இருந்து இளம் வீரரான சஞ்சு சாம்சன் வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சூரியகுமார் யாத்விற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே 5 ஆண்டுகளுக்கு பிறகு டி20 அணியில் இடம்பிடித்த சஞ்சு சாம்சன் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர் என தனக்கு கிடைத்த அடுத்தடுத்த வாய்ப்பை வீணடித்ததன் மூலம் தனது இடத்தை இந்திய அணியில் இழந்துள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 7 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெறும் 83 ரன்களை மட்டுமே குவித்துள்ளார்.

Samson

இதன் காரணமாக அவர் தனது இடத்தினை இழந்துள்ளார். மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே ஐ.பி.எல் மற்றும் உள்ளூர் போட்டிகள் என அசத்தி வரும் சூரியகுமார் யாதவிற்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் அவர் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement