இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. ஆஸ்திரேலிய தொடர் முடிந்ததும் உடனடியாக இந்திய அணி நியூசிலாந்து செல்கிறது.

இந்நிலையில் நியூசிலாந்து தொடருக்கான டி20 இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் தொடக்க வீரர் ரோகித் சர்மா மீண்டும் அணியில் இணைந்துள்ளார். மேலும் காயம் காரணமாக அணியில் இடம்பெறாத ஹர்டிக் பண்டியா அவருக்கு பதிலாக மீண்டும் சிவம் துபே தேர்வாகியுள்ளார்.
மற்றபடி இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய அதே இந்திய அணி நியூசிலாந்து தொடரை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இளம் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன் அணியிலிருந்து மீண்டும் நீக்கப்பட்டுள்ளார். கடந்த சில தொடர்களாக டி20 அணியில் இடம்பிடித்த சாம்சன் வாய்ப்பு கொடுப்பது போல கொடுக்கப்பட்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற இறுதி போட்டியில் மட்டும் விளையாட வைக்கப்பட்டு மீண்டும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
India’s T20I squad for NZ tour announced: Virat Kohli (C), Rohit Sharma (VC), KL Rahul, S Dhawan, Shreyas Iyer, Manish Pandey, Rishabh Pant (WK), Shivam Dube, Kuldeep Yadav, Yuzvendra Chahal, W Sundar, Jasprit Bumrah, Mohd. Shami, Navdeep Saini, Ravindra Jadeja, Shardul Thakur
— BCCI (@BCCI) January 12, 2020
அவரின் இந்த நீக்கம் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக அமைந்தது. மேலும் தொடர்ந்து பேட்டிங் மற்றும் கீப்பிங்கில் சொதப்பி வரும் பண்டிற்கு பதிலாக சாம்சனுக்கு இன்னும் சில வாய்ப்புகளை வழங்கி இருக்கலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.



