தோனிக்கு அடுத்து இந்த இளகிய மனம் உங்களிடம் தான் உள்ளது. சஞ்சு சாம்சனை புகழ்ந்த – மைதான அதிகாரிகள்

Samson

இந்திய அணியின் இளம் வீரரான சஞ்சு சாம்சன் ஐபிஎல் போட்டிகளின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான இவர் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனாலும் இவருக்கு இந்திய தேசிய அணியில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

Samson

இருப்பினும் இந்திய ஏ அணிக்காக சஞ்சு சாம்சன் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக நடந்த இரண்டாவது போட்டியில் கூட 7 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரி என 48 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். தற்போது சஞ்சு சாம்சன் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இரண்டாவது போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த போட்டி மழை காரணமாக தாமதமாக நடைபெற்றாலும் இந்த போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிந்ததும் இந்த தொடர் முழுவதும் தான் பெற்ற சம்பளத்தை மைதான காப்பாளர்களுக்கு சஞ்சு சம்சன் வழங்கினார். ஏனெனில் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட போதும் அதனை துரிதமாக செயல்பட்டு நிலைமையை சரி செய்த மைதான காப்பாளர்களுக்கு தன்னுடைய சம்பளப் பணம் முழுவதையும் அளிக்க உள்ளேன் என்று கூறி அவருடைய சம்பளத்தை மைதான அதிகாரிகளுக்கு சஞ்சு சம்சன் வழங்கினார்.

samson 2

இந்த தகவலை மைதான அதிகாரிகள் தெரிவித்தனர்.தோனிக்கு அடுத்து இதுபோன்று இளகிய மனம் சஞ்சு சாம்சனிடம் நாங்கள் தற்போது கண்டுள்ளோம். அவரின் இந்த செயல் சிறப்பானது மேலும் அவர் இந்திய அணியில் இணைந்து சாதிக்க எங்களது வாழ்த்துக்கள் என்று மைதான அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தோனி சென்னை மைதான காப்பாளர்களுக்கு இதுபோன்று உதவிகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.