இந்த தம்பி நல்ல விளையாடுறாப்ல அவரை அணியில் சேருங்க. பண்ட் வேணாம் – வலுக்கும் எதிர்ப்பு

Pant

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பரான தோனி தற்போது இந்திய அணியில் நிரந்தர இடம் இல்லாமல் தவித்து வருகிறார். அவருக்கு பதிலாக இனிவரும் தொடர்களில் பண்ட் விளையாடுவார் என்று இந்திய அணியின் தேர்வுக்குழு முடிவு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் தோனி விளையாடததால் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பண்ட் செயல்பட்டார்.

Pant

ஆனால் பண்ட் எதிர்பார்த்த அளவிற்கு இந்த தொடர் முழுவதும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும் அவரது பேட்டிங்கும் இந்த தொடர் முழுவதும் சற்று சுமாராகவே இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்நிலையில் அவருக்கு பதிலாக இந்திய அணியின் இளம் வீரரான சஞ்சு சாம்சன் அணிக்கு தேர்வு செய்யலாம் என்று இந்தி ரசிகர்கள் பலர் தங்களது கருத்துக்களை வலுவாக முன்வைத்து வருகின்றனர்.

அதற்கு காரணம் யாதெனில் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக சஞ்சு சாம்சன் 7 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 48 பந்துகளில் 91 ரன்கள் குவித்து தனது அதிரடி காண்பித்தார். மேலும் தொடர்ந்து உள்ளூர் தொடர்களிலும் சிறப்பாக ஆடிவரும் சஞ்சு சாம்சனுக்கு இன்னும் ஏன் தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை என்ற கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

samson 2

தேர்வுக்குழுவினர் தொடர்ந்து ஏன் போட்டிகளில் சொதப்பி வரும் பண்டுக்கு இடம் அளித்து வருகிறார்கள். அவருக்கு பதிலாக இளம் வீரரான சஞ்சு சாம்சன் தேர்வு செய்ய வேண்டும் என்றும் தங்களது ஆதரவினை சாம்சன்க்கு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.