
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியானது அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்த ஐந்தாவது போட்டியின் போது இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டார்.
அதனால் அவருக்கு பதிலாக வாய்ப்புக்காக காத்திருந்த சஞ்சு சாம்சனுக்கு அபிஷேக் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 22 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 37 ரன்கள் அடித்து அமர்க்களப்படுத்தி இருந்தார்.
அதோடு எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் தனது இடத்தினை அவர் இந்த ஆட்டத்தின் மூலம் உறுதி செய்துள்ளார். இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த கடைசி போட்டியில் அவர் அடித்த 37 ரன்கள் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் அறிமுகமாகி இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக தான் அவர் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க : ரிஷப் பண்ட் தலைமையில் விளையாட இருக்கும் விராட் கோலி.. கடைசியா அவரையும் – டொமஸ்டிக் மேட்ச் ஆடவச்சிட்டாங்க
இதுவரை இந்திய அணிக்காக 52 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் கடந்த போட்டியில் அடித்த 37 ரன்களுடன் சேர்த்து சர்வதேச டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர்களின் பட்டியலில் தானும் இணைந்துள்ளார். 10 ஆண்டுகள் என்கிற மிகப்பெரிய இடைவெளியில் 1000 ரன்களை அவர் அடித்துள்ளது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.