யோ-யோ டெஸ்ட்டில் முதல் இடம்..! அதிரடியாக இந்திய அணியில் நுழைந்த இளம் அதிரடி வீரர்..! – யார் தெரியுமா..?

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டும் என்றால் ‘யோ யோ’ என்ற உடல் தகுதி சோதனையில் தேர்ச்சே பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலைய உருவானது. சிறப்பாக விளையாடும் வீரர்கள் கூட இந்த தேர்வில் தேர்ச்சி அடையாததால் இந்திய அணியில் இடம் பெற்றும் போட்டிகளில் விளையாடாத நிலை ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில் நீண்ட முயற்சிக்கு பின்னர் இந்த தேர்வில் சஞ்சீவ் சாம்சன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
sanju-samson
யோ யோ டெஸ்ட் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு மிகப்பெரிய தலைவலியாக இருந்து வந்தது. சிறந்த வீரர்களை எப்படி இந்த ஒரு தேர்வை வைத்து மதிப்பிடுவது நியாயமாக இருக்கும் என்று பல்வேறு நிபுணர்களும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் சிறப்பாக ஆடிய அம்பத்தி ராயுடு யோ யோ டெஸ்டில் தேர்வாகாதாதல் இங்கிலாந்து தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.

அதே போல கடந்த ஜூன் மாதம் தொடங்கிய முத்தரப்பு போட்டியில் இந்திய ஏ அணியில் சஞ்சீவ் சாம்சன் இடம்பெறுவதாக இருந்தது.ஆனால், அவர் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற யோ யோ தேர்வில் தேர்ச்சி பெறாததால் இந்திய ஏ அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார் சஞ்சீவ் சாம்சன். நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடிய இவர், 441 ரன்களை குவித்து நல்ல பார்மில் இருந்தார்.
samson
இதனால் இவர் இந்திய ஏ அணியிலும் இடம்பெற்று சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் யோ யோ தேர்வில் தோல்பியடைந்து ஏமாற்றத்தை அளித்தார். இந்நிலையில் நேற்று (ஜூலை 11) நடைபெற்ற யோ யோ தேர்வில் சஞ்சீவ் சாம்சன் தேர்ச்சி அடைந்துள்ளார். அதுவும் இந்த தேர்வில் பெரும்பாலானோர் 16.1 புள்ளிகள் பெற்ற நிலையில் 17.4 புள்ளிகளை பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள்ளார்.

- Advertisement -
Advertisement