பண்ட் இப்போ ரொம்ப அவசியமா ? இவர் என்ன செய்ஞ்சா அணியில் சேப்பீங்க ? – கொதிக்கும் ரசிகர்கள்

Samson-1
- Advertisement -

இந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

Pant 3

இந்த தொடருக்கான இந்திய அணியின் தேர்வு இன்று கொல்கத்தாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வு குழு மற்றும் பிசிசிஐ தலைவர் கங்குலி, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் இதர சில உறுப்பினர்கள் அடங்கிய குழுவின் மூலம் இந்த தொடருக்கான தேர்வு நேற்று நடந்தது.

- Advertisement -

இந்தத் தொடரில் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தோனிக்கு ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு அணிகளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது ஒருநாள் அணிக்கான வீரர்களின் விவரம் மற்றும் டி20 தொடருக்கான வீரர்களின் விவரம் வெளியாகியது. அதன்படி கேப்டனாக மீண்டும் விராட்கோலி தொடர்கிறார். ஓய்வு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் தொடர்கிறார்.

Samson

தோனிக்கு பதிலாக இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இளம் வீரர் பண்ட் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இருப்பினும் அவரிடம் இருந்து இதுவரை சிறப்பான ஆட்டம் வெளிவரவில்லை மேலும் தொடர்ந்து அனைத்து தொடர்களிலும் மோசமாக விளையாடி வருகிறார். இருப்பினும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது.

samson 2

இதனை கண்ட ரசிகர்கள் சிறப்பாக விளையாடாத அவருக்கு வாய்ப்பு அளிப்பதில் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும், சிறந்த பார்மிலிருக்கும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளித்து பார்த்திருக்கலாம். மேலும் வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டியில் இடம்பெற்ற சஞ்சு சம்சன் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement