என் மேலயே கடுப்பாகிடுச்சு.. 5 சிக்ஸ்.. அவர் சொன்னதை செஞ்சு காமிச்சுட்டேன்.. ஆட்டநாயகன் சாம்சன் பேட்டி

Sanju Samson
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 133 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஹைதராபாத் நகரில் அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 297-6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 111, கேப்டன் சூரியகுமார் யாதவ் 75 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக தன்சிம் ஹசன் 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து சேசிங் செய்த வங்கதேசம் முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 164-7 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக தவ்ஹீத் ஹ்ரிடாய் 63* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 3, மயங் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் முதலிரண்டு போட்டிகளில் சந்தித்த வெற்றியையும் சேர்த்து 3 – 0 (3) என்ற கணக்கில் இத்தொடரில் இந்தியா வென்றது.

- Advertisement -

ஆட்டநாயகன் சாம்சன்:

இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி சதமடித்து முக்கிய பங்காற்றிய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த இலங்கை தொடரில் அடுத்தடுத்த டக் அவுட்டாகி கேரளா திரும்பிய போது தமது பயிற்சியாளர் ஒரே ஓவரில் 5 சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று சொன்னதை தற்போது செய்துள்ளதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் கிடைத்த வாய்ப்புகளில் தொடர்ந்து அசத்தாததால் தம் மீது தாமே விரக்தியில் இருந்ததாக தெரிவிக்கும் அவர் தற்போது திறமையை கொஞ்சம் நிரூபித்துள்ளதாக நிம்மதி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அணியில் எனக்காக பலரும் மகிழ்ச்சியாக உள்ளனர். நான் சிறப்பாக விளையாடியதில் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். களத்தில் நடத்த விஷயங்கள் கடுப்பை ஏற்படுத்தியது”

- Advertisement -

5 சிக்ஸ் பின்னணி:

“இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க முடியும் என்று நானும் உணர்ந்தேன். இருப்பினும் நிறைய போட்டிகளில் விளையாடிய எனக்கு அழுத்தத்தையும் தோல்விகளையும் எப்படி கையாள வேண்டும் என்பது தெரியும். நான் நிறைய தோல்விகளை சந்தித்துள்ளேன். என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பது தெரியும். எனவே செயல்முறை மீது கவனம் செலுத்தினேன். நாட்டுக்காக விளையாடும் போது அழுத்தம் இருக்கும்”

இதையும் படிங்க: 133 ரன்ஸ்.. சவால் விட்ட வங்கதேசத்தை 5 தோல்விகளுடன் வீட்டுக்கு அனுப்பிய இந்தியா.. பெரிய சாதனை வெற்றி

“ஆனால் அதில் சிறப்பாக விளையாடி திறமையை காண்பிக்க விரும்பினேன். அதற்காக அடிப்படையை பின்பற்றி ஒரு நேரத்தில் ஒரு பந்தை எடுத்துக்கொண்டு விளையாடுவதை தொடர்கிறேன். வார்த்தைகளால் மட்டுமின்றி செயலிலும் இந்திய அணி நிர்வாகத்தினர் எனக்கு ஆதரவு கொடுக்கின்றனர். கடந்த தொடரில் 2 டக் அவுட்டாகி கேரளாவுக்கு சென்ற நான் என்ன நடக்கும் என்று நினைத்தேன். தற்போது இங்கே இருக்கிறேன். ஒரு ஓவரில் 5 சிக்ஸ் அடிக்க வேண்டும் என்று எனது ஆலோசகர் சொன்னார். அதற்காக காத்திருந்து நான் துரத்தியது இன்று நடந்துள்ளது” என்று கூறினார்.

Advertisement