IPL 2023 : ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணி சார்பாக மோசமான சாதனையை படைத்த சஞ்சு சாம்சன் – என்ன தெரியுமா?

Samson-1
- Advertisement -

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-ஆவது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சென்னை அணியை மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. அதோடு சென்னை மண்ணில் கடந்த 2008-ஆம் ஆண்டிற்கு பிறகு 15 ஆண்டுகள் கழித்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.

RR vs CSK Sandeep Sharma Holder Jaiswal Aadam Azampa

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் குவித்தது.

பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொண்டு இறுதிவரை போராடி கடைசியில் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே குவித்தது.

Samson

இதன் காரணமாக மூன்று ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இரண்டு பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு மோசமான சாதனையை ராஜஸ்தான் அணி சார்பாக பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : IPL 2023 : இஷ்டத்துக்கு அம்பயர அப்டி பேசுனீங்கள்ள இந்தாங்க ஃபைன், அஷ்வினை தண்டித்த ஐபிஎல் நிர்வாகம் – நடந்தது என்ன

அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சஞ்சு சாம்சன் எட்டாவது முறையாக டக் அவுட்டாகி அதிக முறை ராஜஸ்தான் அணிக்காக டக் அவுட்டான வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து ஷேன் வார்ன் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement