கேரளா வெள்ள நிவாரண நிதியாக “15 இலட்சம்” கொடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்.! யார் தெரியுமா.?

இந்திய ஏ அணி கிரிக்கெட் வீரரான சஞ்சு சாம்சன் IPL போட்டிகளின் மூலம் நாம் அனைவரும் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. விக்கெட்கீபிங் பேட்ஸ்மேனான இவர் இந்திய அணியில் ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இவர் பெயர் இடம் பெற்றது. அனால், “யோ யோ” டெஸ்ட்-ல் தனது உடற்தகுதியினை நிரூபிக்காததால் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

sanju

இந்நிலையில், அவர் தற்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு பாராத வெள்ளபெருக்கிற்கு நிவாரண நிதியாக அவர் மற்றும் அவரது குடும்பம் சார்பாக “15 இலட்சம்” அளித்துள்ளார். அவர்,கேரளாவில் பிறந்தவர். மேலும், கேரளா மாநில அணியின் கேப்டனாக இருக்கிறார். இவரது இச்செயல் இவர் மீது மக்களுக்கு ஒரு பெரிய மரியாதையை வரவைத்துள்ளது. இவரைப்போல கிரிக்கெட் வீரர்கள் வருத்தத்தை மட்டும் தெரிவிக்காமல், நிவாரண நிதி அளித்தால் அது கேரளாவில் பாதிக்க பட்டுள்ள மக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.

samson family

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி ஆரம்பித்த மழை, விடாமல் பல நாள்கள் பெய்ததால், மத்திய – வட கேரளப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகிறது. அணைகள் அனைத்தும் நிரம்பியதால், 22 அணைகள் திறக்கப்பட்டன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வருகின்றனர்.