புவனேஷ்வர் குமாருக்கு பதில் இவர் இந்திய அணியில் இருந்திருக்க வேண்டும் – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

Sanjay
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 14வது ஐபிஎல் தொடரை தொடர்ந்து அங்கு டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடக்க இருக்கும் இந்த தொடரின் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. தற்போது ஓமன் நாட்டில் தகுதிச்சுற்று போட்டிகள் முடிவடைந்த வேளையில் சூப்பர் 12 – சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன .

Cup
T20

இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 ஆட்டங்கள் துவங்கியுள்ள நிலையில் முன்னணி அணிகள் தோல்வியை சந்தித்து வருகின்றன. இந்திய அணியும் பாகிஸ்தான் அணிக்கெதிரான லீக் போட்டியில் தோல்வியை சந்தித்தது. ஏற்கனவே இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து பல விவாதங்கள் இந்திய அணி குறித்து உள்ளன.

- Advertisement -

அதில் சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டும் இருந்தது. இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் நிச்சயம் பங்கேற்க வேண்டிய ஒரு வீரர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Sanjay
Sanjay manjrekar

இந்த டி20 உலக கோப்பை தொடரில் புவனேஷ்வர் குமாருக்கு முன்னதாக தீபக் சாகர் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். புவனேஸ்வர் குமார் நல்ல பவுலர் தான் அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவர் தற்போது தனது முழு திறமையுடன் இல்லை. அதே வேளையில் தீபக் சாஹர் கடந்த சில ஆண்டுகளாகவே டி20 கிரிக்கெட்டில் அட்டகாசமான பவுலிங்கை வெளிப்படுத்தி வருகிறார். அவரால் பந்தை இரு பக்கமும் ஸ்விங் செய்யமுடிகிறது. அதுமட்டுமின்றி பவர் பிளே ஓவர்களிலேயே விக்கெட்டையும் வீழ்த்துகிறார்.

- Advertisement -

தற்போது உள்ள படி பார்த்தால் புவனேஷ்வர் குமாரை விட தீபக் சாஹர் சிறந்த பந்துவீச்சாளர் என்றே கூறுவேன். நிச்சயம் அவர் இந்திய அணியில் இடம் பெற்றிருக்க வேண்டிய ஒரு வீரர் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

அவர் கூறியது போலவே தற்போது நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் புவனேஷ்வர் குமாரிடம் இருந்து பெரிய அளவில் சிறப்பான பந்துவீச்சு வெளிப்படவில்லை. ஆனால் சிஎஸ்கே அணியில் விளையாடி வரும் தீபக் சாஹர் சிறப்பான பந்துவீச்சை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதோடு அவர் உலகக்கோப்பை அணியில் ரிசர்வ் வீரராக தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement