- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கோலி, ரோஹித் மட்டும் ஒசத்தியா? பிசிசிஐ இந்திய கிரிக்கெட்டை காயப்படுத்திட்டாங்க.. சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சனம்

வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அரை சதம் கூட அடிக்காமல் ரசிகர்களுக்கும் இந்திய அணிக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தனர். முன்னதாக இந்தியாவுக்காக விளையாடும் அனைவரும் உள்ளூர் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது.

அதன் அடிப்படையில் சமீபத்தில் நடைபெற்ற 2024 துலீப் கோப்பையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிகப்பெரிய அனுபவத்தை கொண்ட அவர்கள் நட்சத்திர அந்தஸ்தையும் கொண்டுள்ளனர். எனவே அவர்களை மரியாதையுடன் நடத்துவதற்காக துலீப் கோப்பையில் ஓய்வு கொடுப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார்.

- Advertisement -

சமமாக நடத்தவில்லை:

ஆனால் வங்கதேச தொடரில் களமிறங்கிய விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் பெரிய ரன்கள் எடுக்கவில்லை. அதற்கு துலீப் கோப்பையில் விளையாடாமல் நேரடியாக களமிறங்கியதே காரணம் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் சமீபத்தில் விமர்சித்திருந்தார். இந்நிலையில் அனைத்து வீரர்களையும் சமமாக நடத்தாமல் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு மட்டும் சலுகைகளை வழங்கும் பிசிசிஐ இந்திய கிரிக்கெட்டில் உள்ள மற்ற வீரர்களை காயப்படுத்துவதாக மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் கவலைப்படவில்லை. ஆனால் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியிருந்தால் வங்கதேச தொடரில் அவர்கள் சிறப்பாக இருந்திருப்பார்கள் என்ற உண்மையைப் பற்றி யாரோ ஒரு குறிப்பை செய்திருந்தார்கள் என்று நம்புகிறேன். துலீப் கோப்பையில் அவர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தது. குறிப்பிட்ட சில வீரர்களை வித்தியாசமாக நடத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்”

- Advertisement -

காயப்படுத்தும் பிசிசிஐ:

“துலீப் கோப்பையில் விராட் மற்றும் ரோஹித் விளையாடாதது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. அந்த 2 வீரர்களுக்கும் நல்லதல்ல. அவர்கள் அங்கே விளையாடியிருந்தால் விஷயங்கள் வேறு மாதிரி இருந்திருக்கும். இருப்பினும் வங்கதேச தொடரில் கம்பேக் கொடுப்பதற்கான கிளாஸ் மற்றும் அனுபவம் அவர்களிடம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை”

இதையும் படிங்க: 305 ரன்ஸ் சேசிங்.. ஹரி ப்ரூக் மிரட்டல்.. மழையை தாண்டி ஆஸியின் 2வது உலக சாதனையை உடைத்த இங்கிலாந்து

“ஆனால் இந்த விஷயம் அமைதியாக கவனிக்க வேண்டிய ஒன்று. இது நீண்ட காலமாக இந்திய கிரிக்கெட்டில் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. அதாவது சில வீரர்கள் தங்களுடைய நட்சத்திர அந்தஸ்தின் காரணமாக சிறப்பு சலுகைகளுடன் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அது இறுதியில் மற்ற வீரர்களை அந்த வீரரை அதிகமாக காயப்படுத்துகிறது” என்று கூறினார்.

- Advertisement -