- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சர்பராஸ் கான் விடயத்தில் இந்திய அணி மிகப்பெரிய தவறு செய்து விட்டது – சுட்டிக்காட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்

மும்பையை சேர்ந்த 27 வயது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சர்ஃபராஸ் கான் உள்ளூர் போட்டிகளில் மிகப்பெரிய அளவில் ரன்களை குவித்து கடந்த ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். அப்படி அறிமுகமான சப்ராஸ்கான் இதுவரை இந்திய அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதம் என 371 ரன்கள் குவித்துள்ளார்.

சர்பராஸ் கானிற்கு வாய்ப்பினை வழங்கியிருக்க வேண்டும் :

இதில் அதிகபட்சமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 150 ரன்கள் குவித்து வியக்க வைத்திருந்தார் ஆனாலும் அதற்கு அடுத்த போட்டியிலேயே அவர் மோசமான ஷாட்டின் மூலம் ஆட்டமிழந்து சொதப்பியும் இருந்தார்.

- Advertisement -

இருந்தாலும் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் அவருக்கு இடமும் கிடைத்திருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்திய அணியின் பேட்டிங் இந்த தொடரில் மோசமாக இருந்ததே இந்த தோல்விக்கு முக்கிய முக்கியமான காரணமாக பார்க்கப்பட்ட நிலையில் நிச்சயம் சர்பராஸ் கானை பயன்படுத்தி பார்த்திருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : முதல்தர கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்ததால் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

அப்படி கிடைத்த வாய்ப்பிலும் அவர் சரியாக செயல்பட்டு இருக்கிறார். ஒரு மோசமான ஆட்டத்தை வைத்து அவரை இந்திய அணி கழட்டி விட்டுள்ளதாக எனக்கு தோன்றுகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் அவர் ரன்கள் குவிக்க மாட்டார் என்று நினைத்து அவரை தேர்வு செய்யாமல் விட்டார்கள். ஆனால் ஒருவேளை அவர் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தால் என்ன செய்வீர்கள்?

இதையும் படிங்க : எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேணும்.. பி.சி.சி.ஐ-யிடம் அனுமதி கேட்டு விலகிய கே.எல் ராகுல் – விவரம் இதோ

இந்திய மண்ணில் சிறப்பாக விளையாடிய அவர் ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் விளையாட மாட்டார் என்ற முடிவுக்கு நாம் வரக்கூடாது. அவருக்கு வாய்ப்பினை வழங்கி அவரை சோதித்து பார்த்திருக்க வேண்டுமே தவிர இப்படி வெளியில் அமர வைத்தது தவறு என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -