அடுத்த போட்டியில் இவருக்கு சேன்ஸ் கெடச்சா.. அவருக்கு செம லக்குன்னு தான் அர்த்தம் – மஞ்சரேக்கர் கருத்து

Sanjay
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் 4 போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் இறுதி 5வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 10-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மான்செஸ்டர் நகரில் துவங்க உள்ளது.

indvseng

- Advertisement -

இந்நிலையில் இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் இந்திய அணியின் பேட்டிங்கில் மிடில் ஆர்டர் சற்று பலவீனமாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக அணியின் மூத்த வீரரான துணை கேப்டன் ரகானே மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது அவருக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Rahane-1

இந்திய அணியில் பல இளம் வீரர்கள் தங்களது வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். ஹனுமா விஹாரி, சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் தற்போது விளையாட தயாராக இருக்கும் வேளையில் ரஹானேவை தொடர்ந்து அணியில் வைத்திருப்பது கடினம். ஒருவேளை அவர் மீண்டும் 5வது டெஸ்ட் போட்டியில் விளையாடினால் அவரை விட அதிர்ஷ்டசாலி வேறு யாரும் இல்லை என்றே கூறலாம்.

Rahane

தற்போது ரஹானேவிற்கு சிறிது ஓய்வு தேவை. அவரின் இடத்திற்கு தற்போது நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். எனவே ரகானேவிற்கு ஓய்வு அளித்து 5வது போட்டியில் புதிய வீரர்களை முயற்சி செய்து பார்க்கலாம் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement