கோலி இந்த இடங்களிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும். அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்சரேக்கர் – விவரம் இதோ

Sanjay
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது மூலம் கேப்டன் விராட் கோலி மீது பல்வேறு விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளது. முதல் டெஸ்டின் தோல்வியை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் வெற்றி பெரும் முனைப்போடு மிகத் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இதற்காக தீவிர பயிற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் செயல்பாடுகள் மற்றும் வியூகங்களை சில இடங்களில் புரிந்து கொள்ள கடினமாக இருந்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Eng-bess

- Advertisement -

22 ஆண்டுகள் கழித்து சென்னையில் இந்திய அணி தோற்பது இதுவே முதன் முறை. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. சொந்த மண்ணிலேயே ஏற்பட்டுள்ள இந்த தோல்வி ரசிகர்களிடேயே மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படித்தியுள்ளது. விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி தொடர்ந்து பெறும் 4வது தோல்வி இதுவாகும். மேலும் கடந்த 22 ஆண்டுகளில் சென்னையில் இந்திய அணி தோற்பது இதுவே முதன் முறையாகும்.

நம்பிக்கையை இழந்த நதீம் :

முதல் டெஸ்ட் போட்டியின் தோல்வி குறித்து பேசிய சஞ்சய் மஞ்ச்ரேகர், இந்திய அணி தவறு செய்தது என்றும் வியூககங்களை சரியாக வகுக்கவில்லை என்றும் நான் கூறமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். நதீம் சரியாக பந்துவீசாததால் குல்தீப் யாதவை நதீம் இடத்தில் எடுக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் கேட்டு வருவதாக தெரிவித்தஅவர், இந்திய அணியில் வீரர்களின் தேர்வு நன்றாகத்தான் இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Nadeem

கோலி இந்த இடங்களில் கவனுத்துடன் இருக்க வேண்டும் :

அவுட் சைட் ஆஃப் ஸ்ட்ம்பில் சிறப்பாக பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்க கூடிய வல்லமை வாய்ந்த வாஷிங்டன் சுந்தர், ஆட்டத்தின் ஒரு சில சமயங்களில் பவுலிங் லைன் சரியாக வீசவில்லை என்று தெரிவித்துள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இது போன்ற இக்கட்டான இடங்களில் விராட் கோலியின் வியூகமும், எண்ணமும் அவரது அணி தேர்வும் மிகப்பெரிய குழப்பமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Nadeem-1

இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல பலன் அளித்து வந்த சென்னை பிட்சில் ஷபாஷ் நதீம் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டும் கைப்பற்றி ஏமாற்றம் அளித்துள்ளதாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். இதற்கு காரணம் நதீமால் களத்தில் சுதந்திரமாக செயல்பட முடியாமல் போனது தான் என்றும் மேலும் கோலி இதுபோன்ற இடங்களில் கூடுதல் கவனுத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement