நடராஜனின் வருகையால் இவருக்கு தான் ஆப்பு. இனிமே போட்டி இவங்களுக்குள்ள தான் – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

Sanjay
- Advertisement -

இந்திய அணியின் நிரந்தர வேகப்பந்து வீச்சாளராக மாறிவரும் தங்கராசு நடராஜன் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி அவர் தனது முழுத் திறமையை வெளிப்படுத்தி விட்டார் என்றுதான் கூறவேண்டும். அவர் மீது நம்பிக்கை வைத்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அவருக்கு மொத்தம் விளையாடிய 16 போட்டிகளிலும் வாய்ப்பு கொடுத்தார். அத்தனையிலும் மிகச் சிறப்பாக பந்து வீசி 16 விக்கெட்டுகள் சாய்த்து இருந்தார் நடராஜன்.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் சர்வதேச தரம் மிக்க ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, ஏபி டிவிலியர்ஸ் போன்ற வீரர்களின் விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

Nattu-2

- Advertisement -

இதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் கவனத்தை தன் பக்கம் திருப்பி இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் பெயர் சொல்லும் அளவிற்கான பந்துவீச்சாளராக இருக்கிறார். தற்போது வரை மூன்று போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். நடராஜனின் வருகை மற்ற இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சற்று நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இந்நிலையில் நடராஜனின் வருகை முகமது ஷமிக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கும் என்று கூறியிருக்கிறார் முன்னாள் இந்திய வீரரும் சர்ச்சை வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இதுகுறித்து அவர் கூறுகையில் : “நடராஜன் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி கொண்டிருக்கிறார். அவரது சிறப்பான செயல்பாட்டால் இந்திய அணி பும்ரா மற்றும் நடராஜன் ஆகிய இருவரை மட்டுமே குறுகிய ஓவர் போட்டிகளில் வைத்து விளையாட முடிவு செய்திருக்கும்.

nattu 1

ஷமி தற்போது காயத்தில் இருக்கிறார். அப்படியே காயத்திலிருந்து மீண்டாலும் டி20 போட்டியில் மீண்டும் அவருக்கு நிரந்தர இடம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். நடராஜன் சிறப்பாக பந்து வீசுகிறார். இந்தியாவில் யாரும் போட முடியாத யார்க்கர் பந்துகளை அச்சு அசலாக ஆணித்தரமாக வீசுகிறார்.

nattu

இப்படி பார்த்தால் ஜஸ்பிரித் பும்ரா ஒரு பக்கமும் தங்கராசு நடராஜன் ஒரு பக்கமும் பந்து வீசுவதை விராட் கோலி விரும்புவார். ஒருபக்கம் வலது கையில் வீசினால் நடராஜன் ஒருபக்கம் இடது கையில் வீசுவார். இதுதான் மிகச் சரியாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். ஒருபக்கம் இவர் இப்படி கூற மறுபக்கம் நடராஜனின் ரசிகர்கள் அவர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பை டி20 தொடரில் விளையாட வேண்டும் என தங்களது விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement