அது நிச்சயம் கோலியின் ஐடியாவாக தான் இருக்கும். பும்ரா செயல்படுத்தி விட்டார் – சஞ்சய் மஞ்சரேக்கர்

Sanjay
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி கடைசி நாளில் அபாரமனா ஆட்டத்தை வெளிப்படுத்தி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

siraj 1

இந்த போட்டியில் இங்கிலாந்து வீரரான ஆண்டர்சனுக்கு எதிராக கடினமான பல பவுன்சர்களை பும்ரா அதிவேகத்தில் வீசினார். அந்த மோதல் ஆனது இரண்டாவது இன்னிங்சில் பும்ரா பேட்டிங் செய்யும் வரை தொடர்ந்தது. மேலும் இங்கிலாந்து வீரர்கள் வீசிய பவுன்சர்களை பும்ரா எளிதாக சமாளித்து ரன்களை குவித்தது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் இந்த ஆக்ரோஷமான பந்து வீச்சு குறித்து பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில் : இது முழுக்க முழுக்க விராட் கோலியின் திட்டமாகவே இருக்கக்கூடும் என நினைக்கிறேன்.

bumrah 1

ஏனெனில் இங்கிலாந்து அணியின் அனுபவ வீரரானஆண்டர்சனுக்கு பவுன்சர்கள் வீசும் போது அவருக்கு காயம் ஏற்படும். இதனால் அந்த அணி பின்னடைவை சந்திக்கும். அந்தத் திட்டத்தை பும்ரா கச்சிதமாக செயல்படுத்தினார், அதற்கு நல்ல பலனும் கிடைத்தது என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

IND 1

காரணம் எதுவாக இருந்தாலும் இந்தியில் திட்டம் எனக்குப் பிடித்திருக்கிறது. ஏனெனில் நாங்கள் விளையாடிய காலங்களில் இதுபோன்று பிளான் எல்லாம் செய்து பந்துவீசியது கிடையாது. நாம்தான் எதிரணியின் பந்துவீச்சை கண்டு பயப்படுவோம். ஆனால் தற்போது இந்திய அணியின் பந்துவீச்சை கண்டு எதிர் அணிகள் பயப்படுகின்றனர் என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement