
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டிகளில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று கோப்பையை வெல்ல பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன. இதன் காரணமாக இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. அதற்கான அட்டவணையும் ஏற்கனவே வெளியாகி விட்டது.
இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான 20 அணிகள் தலா ஐந்து அணிகளாக பிரிக்கப்பட்டு நான்கு குழுக்களாக வகுக்கப்பட்டுள்ளன. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெறும் என்று ஏற்கனவே அட்டவணை அறிவிக்கப்பட்ட வேளையில் இந்திய அணிக்கு எதிரான அந்த போட்டியில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துவிட்டது. இதனால் சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
ஒருவேளை பாகிஸ்தான் அணி அந்த போட்டியில் விளையாடவில்லை என்றால் ஐசிசி குறிப்பிட்ட சில தண்டனைகளையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடவில்லை என்றாலும் அது நல்லது தான் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே எப்போதுமே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் தற்போது இருக்கும் பாகிஸ்தான் அணி ஒரு சிறிய அணியை போல இருக்கிறது. அதனால் போட்டியின் முடியும் ஒரு தலை பட்சமாகவே இருக்கும். நிச்சயம் இந்திய அணி எளிதாக பாகிஸ்தான அணியை வீழ்த்தும்.
இதையும் படிங்க : இந்த 2 பவுலர்களுக்கு எதிராக விளையாடுவது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் – இஷான் கிஷன் பேட்டி
எனவே சுவாரசியமே இல்லாத அந்த போட்டி நடைபெறாமல் போனாலும் எந்த வருத்தமும் கிடையாது. 1990-களில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியது என்றால் மகிழ்ச்சி என்று சொல்லலாம். ஆனால் தற்போதுள்ள பாகிஸ்தான் அணியை மிக எளிதாக இந்திய அணி வீழ்த்தும் என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.