என்னால் இது முடியாமல் போனால் அப்போது ஓய்வு பெற்றுவிடுவேன். தோனி இதைத்தான் என்னிடம் சொன்னார் – மஞ்சரேக்கர் தகவல்

Sanjay

இந்திய அணிக்காக கடந்த 16 வருடங்களாக விளையாடி வருகிறார் மகேந்திரசிங் தோனி. மேலும் கடந்த உலக கோப்பை தொடரின் செமி பைனல் போட்டியில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் தற்போது வரை கிரிக்கெட் விளையாடவில்லை. இந்தியா கலந்து கொண்ட அனைத்து போட்டிகளில் இருந்தும் தன் பெயரை விடுவித்துக் கொண்டார்.

Dhoni
.
இதனால் தோனி மீண்டும் இவர் ஆடுவாரா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. இருந்தாலும் ரசிகர்கள் எப்படியாவது மீண்டும் அவரை இந்திய உடையில் பார்த்து விட வேண்டும் என்று ஆசையாய் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வேளையில்தான் ஐபிஎல் தொடருக்கு தயாராகிக் கொண்டிருந்தார் டோனி.

அந்த நேரத்தில் கரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் ஐபிஎல் தொடர் துவங்க இருக்கிறது இதற்காக தோனி கடுமையாக தயாராகி வருகிறார். இந்நிலையில் முன்னாள் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தோனி அவரிடம் ஒரு விஷயத்தை கூறியதாக கூறி உள்ளார். அவர் கூறுகையில்…

dhoni

இந்த ஐபிஎல் தொடரில் தன் மீது தொடுக்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் தோனி பேட் மூலம் பதில் கொடுப்பார். மேலும் விராட் கோலியின் திருமணத்தின் போது என்னிடம் தோனி ஒரு சில தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
.
Dhoni 1

நான் எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்று கேட்டேன். அதற்கு நான் போதுமான உடல் தகுதியுடன் இருக்கும் வரை ஆடுவேன். என்னால் அணியில் உள்ள வீரர்களை விட எந்த அளவிற்கு வேகமாக ஓட முடிகிறதோ அந்த அளவிற்குத்தான் ஆடுவேன். அதன் பின்னர் ஓய்வு பெற்று விடுவேன் என்று தன்னிடம் கூறியதாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார் ஐபிஎல் தொடருக்காக வரும் 20ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாய் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -