2 ஆவது டெஸ்டில் இவரை சேர்க்கக்கூடாது. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய – சஞ்சய் மஞ்சரேக்கர்

Sanjay
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஐந்தாவது நாள் மழை காரணமாக பாதிக்கப்பட்டதால் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து வருகிற 12-ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது.

Kohli

- Advertisement -

ஏற்கனவே இந்த தொடரின் முதல் போட்டியில் தமிழக பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பின. அடுத்த போட்டியில் அவர் விளையாட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்துள்ள முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அணியில் இரண்டு முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே அவர் ஜட்ஜா குறித்து பல சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் அதிகம் விமர்சிக்கப்பட்ட வேலையில் தற்போது இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கருத்தினை தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. ஏனெனில் முதலாவது டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் பேட்டிங்கில் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார்.

jadeja

இப்படி சிறப்பாக செயல்பட்டும் ஜடேஜாவை நீக்க சொன்னதற்காக தற்போது மீண்டும் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை பெற்றுள்ளார். அதே போன்று இரண்டாவது மாற்றமாக ஷர்துல் தாகூரை நீக்கிவிட்டு விஹாரியை அணியில் இணைக்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில் : இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் முதல் போட்டியில் எடுக்காமல் அவருக்கு பதிலாக ஜடேஜாவை சேர்த்தார்கள்.

- Advertisement -

அணிக்கு கூடுதல் பேட்டிங் தேவை என்றால் ஷர்துல் தாகூரை நீக்கிவிட்டு விகாரியை சேர்த்துக்கொள்ளலாம். அதேபோன்று ஜடேஜாவுக்கு பதிலாக அஸ்வின் களமிறங்கினால் அவராலும் பேட்டிங் செய்ய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தேர்வு செய்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவன் இதோ :

1) ரோஹித் சர்மா, 2) கே.எல். ராகுல், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ரஹானே, 6) பண்ட், 7) விஹாரி, 8) அஷ்வின், 9) பும்ரா, 10) சிராஜ், 11) முகமது ஷமி

Advertisement