இந்திய அணியில் 5 ஆவது வீரராக இவர் ஆடினால் தான் கரெக்ட்டா இருக்கும் – மஞ்சரேக்கர் கணிப்பு

Sanjay

இந்திய அணி சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றினாலும், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரை இழந்ததை அடுத்து இந்திய அணியின் வீரர்கள் மீதும் அவர்களின் செயல்பாடு மீதும் விமர்சனம் எழுந்தது.

rahul 3

எப்பொழுதும் பேட்டிங்கில் பலமாக இருக்கும் இந்திய அணி தற்போது பவுலிங்கில் சிறப்பாக இருக்கிறது. பேட்டிங்கில் டாப் 3 வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும் பின்வரிசையில் நான்காம் நிலை, ஐந்தாம் நிலை வீரர்கள் மாற்றம் அடிக்கடி நடந்து வந்தது. ஆனாலும் யாராலும் அந்த இடத்தினை சரியாக பயன்படுத்தி கொள்ள முடியவில்லை.

அதனை தொடர்ந்து இந்த பிரச்சனைக்கு தீர்வாக தற்போது நான்காவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ச்சியாக தனது நிலையான ஆட்டத்தை நிரூபிக்க தற்போது இந்திய அணி நான்காவது வீரராக அவரே செயல்பட்டு வருகிறார்.

Rahul

இந்நிலையில் இளம் நட்சத்திர வீரரான ராகுல் அடிக்கடி தனது இடத்தை மாற்றி மாற்றி இந்திய அணியில் களமிறக்கப்பட்டு வருகிறார். மேலும் எந்த இடத்தில் அவர் களம் இறங்கினாலும் அணிக்கு தேவையான ரன்களை குவிப்பதால் அவர் முக்கியமான வீரராக அணியில் திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் ராகுல் 5-வது இடத்திலேயே தொடர வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சே மன்ஜரேகர் கூறியுள்ளார். இது குறித்து அவர் குறிப்பிட்டதாவது :

- Advertisement -

ஒரு நாள் போட்டியில் 5 வது இடத்தில் லோகேஷ் ராகுல் பொருத்தமானவர். மிடில் ஆர்டரில் யுவராஜ், ரெய்னா போன்ற வீரர்களுக்கு இணையான வீரர்களை களமிறக்கலாம். அப்படி அவர்கள் இருந்திருந்தால் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கலாம். நான்காவது இடத்திற்கு ஸ்ரேயஸ் ஐயரையும், ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவையும் தேர்வு செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார் சஞ்சய் மஞ்ரேக்கர்.

Rahul

தற்போது உள்ள இந்திய அணியின் துவக்க ஜோடி சிறப்பாக இருப்பதால் ராகுல் 5 ஆவது இடத்திலேயே களமிறங்குவார். சமீபத்தில் கோலியும் ராகுல் தொடர்ந்து 5 ஆவது இடத்திலேயே களமிறங்குவார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.