ராகுல் வேண்டாம். இந்திய அணியின் 5 ஆம் இடத்திற்கு இவரே கரெக்ட்டா இருப்பார் – சஞ்சய் மஞ்சரேக்கர் சர்ச்சை கருத்து

Sanjay
- Advertisement -

இந்திய அணி வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஏற்கனவே கடந்த முறை ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்நிலையில் இந்த தொடரையும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. மேலும் வழக்கத்தை விட தற்போது இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

indvsaus

- Advertisement -

ஆனால் கடந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறாமல் இருந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் இம்முறை இடம் பெற்றுள்ளதால் இந்த தொடர் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான அணியில் யாரை தேர்வு செய்யலாம் என்ற விவாதம் தற்போது தொடங்கியுள்ளது.

இந்த விவாதம் குறித்து தற்போது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய அணியின் வீரர்களான ரஹானே மற்றும் ராகுல் குறித்து பேசுகையில் : ரஹானே தனது முதல் இரண்டு வருடங்கள் போல தற்போது ஆடவில்லை. அவரின் ஆட்டம் தற்போது முன்பைவிட மந்தமாக உள்ளதால் மீண்டும் அவர் சிறப்பாக விளையாடுவதை நான் பார்க்க ஆவலாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

Rahul

ஆனால் ராகுல் எடுத்த ரன்களை வைத்து தற்போது பார்க்கும்போது அவர் ஐந்தாம் வரிசையில் பேட்டிங் விளையாட தயாராகவில்லை என்றே நினைக்கிறேன். மேலும் உள்ளூர் போட்டிகளில் மயங்க் அகர்வால் மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்று கூறியுள்ளார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ராகுல் சிறப்பாக ரன் குவித்தாலும் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் அவரை அவசரப்பட்டு சேர்க்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

அதே சமயம் ரஹானே தனது இயல்பான பார்மில் இல்லை என்றாலும் தொடர்ந்து சராசரியாக ரன்களை குவித்து வரும் அவர் தொடர்ந்து ஐந்தாம் வரிசையில் விளையாடலாம் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்துக்கு விமரிசையான கமெண்ட்டுகள் ரசிகர்களிடமிருந்து குவிந்து வருகின்றன.

Rahane

ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே ராகுல் டீ20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது பார்ம்மை நிரூபித்துள்ளார். மேலும் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர் என்பதால் கண்டிப்பாக டெஸ்ட் போட்டிகளில் சாதிக்க முடியும் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

Rahane 1

ஆனால் தற்போது ரஹானே தான் 5-ம் இடத்துக்கு சிறப்பானவர் என்று மஞ்ச்ரேக்கர் கூறியிருப்பது சர்ச்சையாக மாறியுள்ளது. மேலும் எந்த இடத்தில் இறங்கினாலும் அதற்கேற்றார்போல் திறம்பட செயல்பட்டு வரும் ராகுல் நிச்சயம் ஆஸ்திரேலிய தொடரில் சேர்க்கப்பட வேண்டும் என்பது ரசிகர்களின் பொதுவான கருத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement