ரன் குடுக்குறாரேனு கவலைப்படாதீங்க. அதே சமயம் விக்கெட்டையும் எடுத்துகுடுக்குறாரு – சஞ்சய் மஞ்சரேக்கர் பாராட்டு

Sanjay
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி கடந்த 23ஆம் தேதி புனே மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 317 ரன்களை குவிக்க இங்கிலாந்து அணி 43-வது ஓவரில் போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்கள் மட்டுமே குவித்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வீரர்களான ராய் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் 135 ரன்கள் குவித்து சிறப்பான துவக்கத்தை அளித்தும் அதன்பின்னர் தடுமாறிய இங்கிலாந்து அணி முற்றிலுமாக 89 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மோசமான தோல்வியை தழுவியது. குறிப்பாக துவக்க வீரர்கள் முதல் 14.3 ஓவரில் அதாவது 87 பந்துகளில் 135 ரன்கள் குவித்து அசத்தினார்கள். ஆனால் அதன் பின்னர் இங்கிலாந்து அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தாகூர் திகழ்ந்தார். சிறப்பாக விளையாடி வந்த பேர்ஸ்டோ, மோர்கன் மற்றும் பட்லர் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். மொத்தம் 6 ஓவர் பந்து வீசி அவர் 37 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

Shardul-Thakur

இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷர்துல் தாகூர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள கருத்தில் ” அவருடைய எக்கனாமி ரேட் குறித்து யாரும் வருத்தப்பட வேண்டாம்”. ஏனெனில் “ஷர்துல் ஒரு கேம் சேஞ்சர்” தேவையான நேரத்தில் விக்கெட்டுகளையும் அவர் எடுத்து தருகிறார். இனி அவர் தொடர்ந்து இந்திய அணிக்காக இதை செய்வார் என்று அவரை மனதார பாராட்டி உள்ளார்.

அவர் கூறியது போலவே ஷர்துல் தாகூர் டி20 தொடரிலும் அடுத்தடுத்து ஒரே ஒரு 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதேபோன்று ஒருநாள் போட்டியிலும் இக்கட்டான சூழ்நிலையில் ஒரே ஓவரில் மோர்கன் மற்றும் பட்லர் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து முக்கிய திருப்பத்தை தந்தார். இவரது பவுலிங்கை ஏற்கனவே ஜாகிர் காணும் ஒரு மேட்ச் வின்னர் என்று குறிப்பிட்டு பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement